பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

139 சேர்ந்து நடித்தவர் எஸ். டி. சுப்புலட்சுமி. இவருக்காவது எம். கே. டி. யுடன் ஏற்கெனவே நாடகத்தில் சேர்ந்து நடித்திருந்ததால் கொஞ்சம் பெயரும் புகழும் உண்டு. மூன்றாவது படமான 'சத்தியசீலனில் அவருடன் சேர்ந்து நடித்த தேவசேனாவுக்கோ அதுவும்இல்லை. அவர் சினிமா உலகத்துக்கு முற்றிலும் புதியவர். ஆம். திரையுலகத்துக்கு அந்த நாளிலேயே 'புதுமுகம் தேடிக்கொடுத்த பெருமைகூட எம்.கே.டியைச் சேர்ந்தது தான். 'அழகாகப் பாட மட்டுமல்ல; அட்டைக்கத்தி' பிடித்து அந்தர் பல்டி அடிக்கவும் தெரியும் எனக்கு; அதிலும் நான்தான் முதல் என்பதைச் சத்தியசீலன் மூலமாக நிரூபித்த பிறகு, தப்பித் தவறிப் பெயரைக் கூட யாருக்கும் நினைவூட்டிவிடக் கூடாது; நினைவூட்டி விட்டால் நம்மை 'டைரக்டர் என்று யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள்' என்று இந்தக்கால டைரக்டர்களில் பலர் பயப்படும் அளவுக்கு அந்தக்காலத்தில் தமக்கிருந்த 'தொழில் தகுதி" ஒன்றையே பிரதானமாகக் கொண்டு பிரசித்தி பெற்றிருந்த திரு ராஜா சாண்டோ டைரக்ஷனில் 'திரு நீலகண்ட ரைப் படமாக்கும் முயற்சியில் பாகவதர் இறங்கினார். அப்போது எம். கே. டி.யைக் கொண்டு படம் எடுப்பதற்கென்றே ராயல் டாக்கீசார் என்று ஒரு நிறுவனத் தார் மதுரையில் உருவானார்கள். இந்த நாளில் இன்று வாட்டர் பா’யாயிருப்பவன் நாளை புரொட்யூசராகி விடலாம்; இன்று எக்ஸ்ட்ரா சப்ளை செய்பவன் நாளை புரொட்யூச'ராகிவிடலாம். படம் எடுப்பதற்கு இப்போது பணம் தேவையில்லை. வேறு 'எதுவோ தேவையாயிருக்கிறது. அந்த எதுவும் இல்லாமல் பணத்தையும் பரம்பரைப் பண்பையுமே கொண்டு படாதி பதிகளானவர்கள் ராயல் டாக்கீசார். கெளரவமாகத் தொழிலில் இறங்கிய அவர்களுடன் பாகவதரும் கெளரவமாக