பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 ஒத்துழைத்தார். அதன் பயனாக எம்.கே.டி.யின் நாலாவது படமாக, ராயல் டாக்கீசாரின் முதலாவது படமாகச் 'சிந்தாமணி வெளியாயிற்று. இந்தப் படத்தில் பாகவதருக்கு ஜோடியாக நடித்தவர் அஸ்வத்தம்மா. கன்னட நடிகையான இவரும் தமிழ்ப்பட உலகத்துக்கு முற்றிலும் புதியவரே. திரு. ஒய்.வி.ராவ் டைரக்ஷனில் உருவான இந்தப் படம் வாரக்கணக்கில் அல்ல; வருடக் கணக்கில் ஒடிற்று. தங்கள் படத்தின் பாடல்களில் சிலவாவது மக்களிடையே பிரபலமடைய வேண்டும்; அதனாலாவது தங்களுடைய படம் முக்கி முனகி ஓடவேண்டும் என்பதற்காக இந்தக் காலத்துப் படாதிபதிகள் என்ன வெல்லாம் செய்கிறார்கள்! படத்தை வெளியிடுவதற்கு முன்னாலேயே அதன் பாடல்கள் பதிவான 'ரிகார்டு 'களை அவர்கள் பிடிக்க வேண்டியவர்களைப் பிடித்து, ரேடியோ ஸ்டேஷன்களுக் கெல்லாம் கொடுத்து, ஒலி பரப்பச் சொல்கிறார்கள். பொது விழாக்கள் எத்தனை உண்டோ, அத்தனை விழாக்களிலும் அந்த ரிகார்டுகளை வைத்து, 'இந்தப் பாட்டை நீ திரும்பப் திரும்பப் பாடிப் பாப்புல"ராக்குகிறாயா? இல்லை, உன் காதைச் செவிடாக்கட்டுமா?’ என்பதுபோல அவர்கள் ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு, சந்துக்குச்சந்து, மூலைக்கு மூலை மைக்குகளைப் பொருத்தி அலற விடுகிறார்கள்! இத்தனை முயற்சிகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பாடலை நாலு பேர் முணுமுணுத்துவிட்டால் போதும்; அதை 'ஹிட் என்றும், 'பாப்புலர் என்றும் ஓயாமல் ஒழியாமல் சொல்லித் திரிகிறார்கள். அதனாலாவது அவர்கள் எடுக்கும் எல்லா படங்களுமே ஓடிவிடுகின்றனவா என்றால் அதுவும் கிடையாது. 'பாட்டு நன்றாயிருந்தால் என்ன, அதன்