பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

141 ரிகார்டைத் தனியாகப் போட்டுக் கேட்டுக்கொண்டால் போச்சு; அதற்காகப் படத்தைப் பார்த்து வராத தலைவலியை வரவழைத்துக் கொள்வானேன்?' என்று அவற்றில் பலவற்றை மக்கள் பார்க்காமலே இருந்து விடுகிறார்கள் பாகவதர் நடித்த 'சிந்தாமணி அந்த மாதிரி சோதனைகள் எதற்கும் உள்ளாகவில்லை. அதன் பாடல் களைப் பிரபலப்படுத்த அதை வெளியிடுவதற்கு முன்னாலும் சரி, வெளியிட்ட பின்னாலும் சரி- அதனுடைய தயாரிப்பாளர்கள் எந்த விதமான முயற்சியும் செய்ய வில்லை. அப்படியிருந்தும் அந்தப்படம் மட்டுமா வருடக் கணக்கில் ஒடிற்று? அதன் பாடல்களும் வருடக் கணக்கில் பாடப்பட்டன. நாடு நகரமெல்லாம், பட்டி-தொட்டியெல்லாம், வீதி வெளியெல்லாம், மூலை முடுக்கெல்லாம், சந்து பொந்தெல்லாம் - குழாயடியில், கிணற்றடியில், கடற்கரையில், ஆற்றங்கரையில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில், வயற்காடுகளில், குடிசைகளில் - எந்தப் பக்கம் யார் திரும்பினாலும் சரி - 'பேசும் தரமோ காதல் பரவசமானால் . . . "மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை... 'பஜனை செய்வோம் கண்ணன் நாமம் 'ராதே உனக்குக் கோபம் ஆகாதடி!" "ஞானக் கண் ஒன்று இருந்திடும் போதினிலே . . . இந்தப் பாடல்கள் படித்தவர்களால் மட்டுமல்ல; பாமரர்களாலும் திரும்பத் திரும்ப்ப் பாடப்பட்டன. அவற்றைக் கேட்டுக் கிறுகிறுத்த மக்களோ லட்சோப லட்சம்; கோடானுகோடி!