பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 இப்போது மதுரையில் கட்டப்பட்டு நடந்து கொண்டிருக்கும் சிந்தாமணி டாக்கீஸ் இந்தப் படத்தின் வருவாயைக் கொண்டு, இதன் ஞாபகார்த்தமாகக் கட்டப்பட்டதுதான் என்பதை நான் மட்டும் என்ன, நீங்கள்கூடக் கேள்விப்பட்டிருப்பீர்களே? 'சிந்தாமணி'க்குப் பிறகு பாகவதரின் ஐந்தாவது படமாக, சேலம் சங்கர் பிலிம்ஸின் முதலாவது படமாக வெளிவந்தது 'அம்பிகாபதி. இதைத் தயாரித்தவர்களும் பரம்பரைப் பண்பும் பணவசதியும் உள்ளவர்கள். அவற்றுடன் முறையாகப் படித்தவர்களும்கூட. ஆகவே இரவல் சில்க்சட்டை அணிந்து, வாயில் 'சார்மினார்’ சிகரெட்டும், கையில் 555 காலி சிகரெட் டின்னுமாகச் சென்னை தியாகராயநகர் தெருக்களில் 'எடுப்புச் சாப்பாட்டை எதிர்பார்த்து உலாவரும் ஈயடிச்சான் காப்பி' எழுத்தாளர்களைத் தேடிச்சென்று அம்பிகாபதி கதைவசனத்தை எழுதச் சொல்லாமல், திரு.இளங்கோவனைத் தேடிச்சென்று எழுதச் சொன்னார்கள். இவர் உண்மையிலேயே அந்தத் துறைக்கு வேண்டிய தகுதியும் திறமையும் உடையவர். அத்துடன் இப்போது யாரோ வசனத்தில் புரட்சி செய்துவிட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்களே, அந்தப் "புரட்சி'யைக் கண்ணகி படத்தின் மூலம் எப்போதோ மெளனமாகச் செய்துவிட்டு, இன்றும் அதை வெளியே சொல்லாமல் மெளனமாக இருந்து கொண்டிருப்பவர். இல்லாவிட்டால் கர்ண பரம்பரைக்கதையான 'அம்பிகாபதி'யை அவ்வளவு அழகாக, பொருத்தமாக வரலாற்றுப் பின்னணியுடன் இணைத்து இந்நாட்டு ஷேக்ஸ்பியர் போல் அவரால் உரையாடல் எழுதியிருக்க முடியுமா? உதாரணத்துக்கு அந்தக் கதையின் அமைப்பைத்தான் கொஞ்சம் பாருங்களேன்: