பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 அழகான மலராக மலரட்டும். நான்சென்று வருகிறேன் என்று கவி நயத்துடன் கூறி, அம்பிகாபதி அவளிடம் விடைபெறுகிறான். அன்றிலிருந்து அம்பிகாபதிக்குக் கனவிலும் நினைவிலும் அமராவதியின் ஞாபகமாகவே இருக்கிறது. இதையறிந்த கம்பர், 'பாடிப் பிழைக்கும் பாவலன் மகனுக்குப் புவியாளும் பூமகன் மகள் கிட்டுதல் அரிது' எனப் புகல்கிறார். அதைக் கேளாது அம்பிகாபதி தன் காதலியை அடிக்கடி ரகசியமாகச் சந்தித்து வருகிறான். ஒருநாள் இரவு அரசன் தன் அமைச்சனுடன் மாறுவேடம் பூண்டு, நகர சோதனை செய்துவரும்போது, தன்னுடைய மகளின் கள்ளக்காதலைப்பற்றித் தோட்டக் காரமுனியனின் மனைவியான மருதாயியும், அவளுடைய கள்ளக்காதலனான கண்ணனும் பேசிக் கொள்வதைக் கேட்டு விடுகிறான். அதனால் கோபமுற்ற அரசன், அதன் உண்மையை அறிந்து சொல்லுமாறு உடனிருந்த அமைச்ச னுக்கு உத்தரவிடுகிறான். இது இப்படியிருக்க, அமராவதியின் மேல் அம்பிகாபதி காதல் கொண்டிருப்பதை அறிந்த ருத்ர சேனனுக்கு அவன் மேல் பொறாமை உண்டாகிறது. அதன் காரணமாக அவன் அமராவதிக்கு அம்பிகாபதியின் மேல் வெறுப்பை உண்டாக்கி, அவளுடைய அன்பைத் தான் பெறுவதற்காகத் தனக்கு வேண்டிய தாசியான வஞ்சிக் கொடியின் மூலம் பல சூழ்ச்சிகள் செய்து வருகிறான். அம்பிகாபதி அந்த வஞ்சியின் வலையில் விழாமல் தப்பித்துக் கொள்கிறான். இதனால் ருத்ரசேனனின் கோபம் அதிகரிக்கிறது. அவன் பித்தம் பிடித்தவன் போலாகிறான். இந்த நிலையில் அரசனின் பிறந்த நாளை முன்னிட்டுப் புலவர்களுக்கு அரண்மனையில் ஒரு விருந்து வைக்கப்படுகிறது. அந்த விருந்து நடைபெறும்போது, தென்றலில் ஆடும் முல்லைக் கொடிபோல் வட்டிலைக்