பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 இதையறிந்த அமராவதி அன்றிரவு சிறையிலிருந்த அம்பிகாபதியைச் சந்தித்து, அரசனுடைய முடிவைத் தெரிவித்து, மறுநாள் அவன் பாடப்போகும் நூறு பாடல்களையும் நூறு ரோஜா மலர்கள் கொண்டுதான் எண்ணுவதாகவும், கடைசிப் பாட்டைப் பாடி முடித்ததும், தான் மேலே இருந்து அவனைப் பார்ப்பதாகவும் சொல்லிவிட்டும் போகிறாள். சோதனை தினம்; அவையில் எல்லோரும் கூடியிருக்கின்றனர். அம்பிகாபதி முதலில் 'காப்புச்செய்யுள் பாடுகிறான். அமராவதி அதை முதலாவது செய்யுளாக எண்ணி, ஒரு ரோஜா மலரை எடுத்துப்போடுகிறாள். இது அவள் செய்த தவறு என்பதை அறியாத அம்பிகாபதி, தொடர்ந்து தொண்ணுற்றொன்பது செய்யுட்களைப் பாடி முடிக்கிறான். உடனே சொன்னது சொன்னபடி அம்பிகாபதிக்கு அமராவதியின் தரிசனம் கிடைக்கிறது. அதன் காரணமாக நூறாவது செய்யுள், 多德 சற்றே சரிந்த குழலே துவளத் தாளவடத் துற்றே யசையக் குழை யூசலாடத் துவர்கொள் செவ்வாய் நற்றே னொழுக நடனசிங்கார நடையுடையாள் பொற்றே ரிருக்கத் தலையலங்காரம்புறப்பட்டதே' என சிற்றின்பச் செய்யுளாக மாறிவிடுகிறது. சபையில் ஒரே ஆரவாரம். அரசன் இனி பொறுப்ப தில்லை’ என்று கொதித்தெழுந்து அம்பிகாபதியை உடனே கொல்ல உத்தரவிடுகிறான். கம்பர் தம் மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுக்குமாறு மன்றாடுகிறார். மன்னன் மனம் இளகவில்லை. அமராவதி மூர்ச்சையாகிறாள். அம்பிகாபதி கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப் படுகிறான்.