பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சிதம்பர நாதா, திருவருள் தாதா!... கொலைக்களத்தில் சந்தித்த அம்பிகாபதியும் அமராவதியும் என்னவானார்கள் என்பது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். துன்பியல் கதை'யான அந்தக்கதையை இலக்கிய நயத்தோடு மட்டுமல்ல; காவிய நயத்தோடு மட்டுமல்ல; புகழ் பெற்ற ஷேக்ஸ்பியரின் ரோமியோஜூலியட்'டுக்கு நிகராகத் திரு இளங்கோவன் எழுதியிருந்தார். அதை டைரக்ட் செய்திருந்தவரோ எல்லிஸ் ஆர்.டங்கன் படத்தின் வெற்றிக்குக் கேட்க வேண்டுமா? - சக்கைப்போடு போட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு தயாரான பாகவதரின் ஆறாவது படம் திருநீலகண்டர். ' இதன் படப்பிடிப்பின்போது ஒரு நாள்... 'ஷல்ட்டிங்கோ', 'ரிகார்டிங் கோ இல்லாததால் பாகவதருக்குப் பொழுது போகவில்லை. அலுவலகத்தில் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த தபேலாவை எடுத்து வைத்துக் கொண்டு, அதைத் தாமே வாசித்தபடி லாவணி" பாடிக் கொண்டிருந்தார். 'பேஷ் பேஷ், பிரமாத மாயிருக்கிறதே! அதுகூடத்தெரியுமா உங்களுக்கு?'என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். 'ஏதோ கொஞ்சம் தெரியும் என்றார் எம்.கே.டி. 'பாடுவதைப் பார்த்தால் கொஞ்சம் தெரிந்தாற் போல் இல்லையே?’ என்று தமக்கே உரிய பாணியில் சொல்லிக்கொண்டே அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார் என்.எஸ்.கே. அதற்குப் பதிலாக ஒரு புன்னகையை உதிர்த்து விட்டுப் பாகவதர் மேலே பாடினார். அதைக்கேட்டுக் கொண்டே இருந்த கலைவாணர், திடீரென்று 'வந்துவிட்டது, வந்துவிட்டது!’ என்று துள்ளிக் குதித்தார்.