பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 'நான் முதலாளி, நீங்கள் தொழிலாளி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இன்னொரு பக்கம் பார்த்தால் பிறப்பால் உயர்ந்த பிராமணர் நீங்கள்; நானோ பிறப்பால் தாழ்ந்த விஸ்கர்மா. என்னை விட வயதில் மூத்தவர் நீங்கள்; உங்களைவிட வயதில் சிறியவன் நான். இவற்றுக்காக வாவது நீங்கள் என்னை உதைக்கலாமே!" சாமா சொன்னார் 'உங்களைவிட நான் வயதில் மூத்தவன் என்பதை ஒப்புக்கொள்கிறேன்; பிறப்பால் உயர்ந்தவன் என்பதை என்னால் ஒப்புக்கொள்ளமுடியாது. ஏனெனில், சிறப்பை வைத்துப் பார்த்தால் நீங்கள் எங்களைவிட உயர்ந்தவர்' சரி, எதை ஒப்புக்கொண்டாலும், எதை ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இந்தக் காட்சிக்காக என்னை உதைக்க வாவது ஒப்புக்கொள்ளுங்கள்' என்றார் பாகவதர். அதற்குமேல் இதற்காக கடவுள் என்னை மன்னிக் கட்டும் என்று 'செட்டின் கூரையைப் பார்த்து முணு முணுத்துக்கொண்டே நீலகண்டராக நடித்த பாகவதரை யோகியாக நடித்த சாமா எட்டி உதைத்தார். அந்தக் காட்சியை அப்படியே படமாக்கிவிட்டு, “ஏ ஒன், ஓ.கே!' என்றார் ராஜா சாண்டோ. சந்திர சூரியர் போம் கதி மாறினும்... புராணக் கதைகளுக்கும் வரலாற்றுக் கதைகளுக்கும் சமூகப் படங்களில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அத்தனை அம்சங்களையும் அவற்றிலும் புகுத்தி எழுதமுடியுமா? 'முடியும், சாத்தியம் என்று அந்த நாளிலேயே தெள்ளத்தெளிவாக நிரூபித்துக் காட்டியவர் திரு இளங் கோவன்.