பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 'திருநீலகண்ட'ரில் ஒரு காட்சி - தாசி கலாவல்லி, நீலகண்டரைத் தன் மாய வலைக்குள் சிக்க வைக்கப் பார்ப்பாள். அப்போது அவர்கள் இருவருக்கும் வாக்கு வாதம் நடக்கும். அந்த வாக்குவாதம் எப்படியிருந்தது? “எத்தனையோ பேருகிட்டே எலந்தப்பயம் பார்த்தியே, எடுத்துப்பார்த்த பயங்களிலே இம்மா சைசு பார்த்தியா?" என்பது போலவா இருந்தது? இல்லை; அவர்களுக்கு இடையே நடந்த உரையாடல்கள் மனிதனைத் தேவனாக்க முயலாவிட்டாலும் மிருகமாக்க முயலாமல் குறைந்தபட்சம் மனிதனை மனிதனாகவாவது வைத்திருக்க முயன்றன. அவற்றில்தான் தர்க்க ரீதியான கேள்விகள் எத்தனை தத்துவமயமான பதில்கள் எத்தனை அந்தக் கேள்விகளிலும் பதில்களிலும் இளங்கோ வனையும் அவருடைய அசாதாரணமான எழுத்துத் திறமையையும் மட்டுமா நாம் கண்டோம்? மகாகவி ஷேக்ஸ்பியரையும் மனத்தைக் கவ்விப்பிடிக்கும் அவ ருடைய மதி நுட்பத்தையும்கூட அல்லவா கண்டோம் ஆம், ஷேக்ஸ்பியர் தம்முடைய இளமைப் பருவத்தில் எழுதிய ரேப் ஆப் லுக்ரீஸ்'என்ற நூலிலிருந்தும், 'iனஸ் அண்டு அடோனிஸ்'என்ற காவியத்திலிருந்தும் சில சுவையான பகுதிகளை எடுத்து அதில் அவர் கையாண் டிருந்தது என்னவோ உண்மைதான். ஆயினும் அந்தத் திறமைதான் இன்றுள்ள சினிமா கதை வசன கர்த்தாக்களில் எத்தனை பேருக்கு இருக்கிறது? அவர்களில் சிலர் தமிழி லிருந்து எடுத்துத் தமிழிலேயே எழுதக்கூட அல்லவா தெரியாதவர்களாக இருக்கிறார்கள்! அது மட்டுமா? அந்த நாளில் எழுத்துத் தொழில் புனிதமான தொழிலாக மதிக்கப்பட்டு வந்தது. அதை மேற் கொண்டிருந்தவர்களும் அந்தத் தொழிலின் புனிதத்தைத் தங்களால் முடிந்தவரை காக்கக் கூடியவர்களாயிருந்தார்கள். முக்கியமாக, இளங்கோவனைப் போன்றவர்கள் ஒரு