பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 படாதிபதி தாமாகவே வந்து தம்மை விரும்பி அழைக்காத வரை எந்த சினிமாக்கம்பெனியின் படியிலும் ஏற மாட்டார். இதனால் என்ன நடந்தது?... படே படே படாதிபதிகள் கூட இளங்கோவனுக்கு முன்னால் சிகரெட் குடிக்க யோசித்தார்கள்; மது அருந்தத் தயங்கினார்கள்; மனைவியைத் தவிர, பிற மங்கைகளுடன் பேச அஞ்சினார்கள். இன்று?... கதை வசன கர்த்தாக்களில் சிலர் எந்த விதமான அழைப்பும் இல்லாமலே நடையிலேயே நடனம் பயிலும் யாராவது ஓர் இளம்பெண்ணுடன் பல சினிமாக் கம்பெனிகளின் படிகளை ஏறி இறங்குகிறார்கள். அதன் பயனாகத் தங்களுடன் வரும் பெண்ணுக்கு நட்சத்திரப் பதவி கிடைத்தால், அவளுடைய நிழலில் அவர்கள் ஒதுங்க நினைக்கிறார்கள்; தங்களுக்குக் கதை வசன கர்த்தா' என்ற 'அந்தஸ்து கிடைத்தால், தங்களுடைய நிழலில் அந்தப் பெண்ணை ஒதுங்க விடுகிறார்கள் இது என்ன சாபக்கேடு? எழுத்துலகத்தைப் பிடித்த இந்தச் சாபக்கேடு என்று ஒழியும்? 'சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம், வெறும் சோற்றுக்கோ வந்த திந்தப் பஞ்சம்?' என்று அன்று பாடினான் பாரதி. அதே மாதிரி இதைச் சொல்ல இன்று என் நெஞ்சமும் கொதிக்கிறது. இந்த லட்சணத்தில் எழுத்துத் தொழில் புனிதமான தொழிலாயிருக்க முடியுமா! அந்தத் தொழிலை மேற் கொள்பவர்களால்தான் அதன் புனிதத்தை ஓரளவாவது காப்பாற்ற முடியுமா? இந்த நிலையில் எந்தப் படாதிபதி கதை வசன கர்த்தாவுக்கு முன்னால் சிகரெட் குடிக்க யோசிப்பார்? மது