பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

159 'நன்றி க்குப் பேர் போன பிரிட்டிஷார் சும்மா இருப்பார்களா? பாகவதருக்கு உடனே 'திவான் பகதுர் பட்டம், கொடுக்க முன்வந்தார்கள். பாகவதர் என்ன செய்தார்; வேறொன்றும் செய்ய வில்லை; அதற்கும் சிரித்தார். 'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று பிரிட்டிஷார் கேட்டார்கள். பாகவதர் சொன்னார் : பட்டத்துக்காக நான் உங்களுக்கு உதவில்லை; இந்திய மக்களைப் போலவே இந்த உலகத்து மக்கள் அனைவருமே rேமமாயிருக்கவேண்டும் என்பது என் லட்சியம். அதற்காகவே ஏதோ என்னால் முடிந்த உதவியைச் செய்தேன். உங்கள் பட்டம் எனக்கு வேண்டாம்; போய்வாருங்கள்!" கைமாறு செய்வதுண்டோ?... இப்போது ஒரு நடிகர் சேர்ந்தாற்போல் பத்துப் படங்களில் கூட நடிக்கிறார். இது அவருக்குக் கொண்டாட்ட மாகவும், அவரை வைத்துப் படம் எடுப்பவர்களுக்குத் திண்டாட்டமாகவும் இருக்கிறது. தம்மை வைத்துப் படம் எடுப்பவர்களை இந்தத் திண்டாட்டத்துக்கு உள்ளாக்கப் பாகவதர் எப்போதுமே விரும்புவதில்லை. ஒருபடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது இன்னொரு படத்தில் நடிக்க அவர் ஒரு நாளும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஒன்று முடிந்த பிறகே இன்னொன்றில் நடிக்க ஒப்புக் கொள்வார். இதனால் தமக்குத்தான் நஷ்டம் என்பதை அவர் உணராமல் இல்லை; உணர்ந்தும் தம்மால் பிறர் கஷ்டத்துக்கு உள்ளாகக்கூடாது என்று நினைக்கக் கூடிய 'பொன் மனம்' அவருக்கு அப்போது நிஜமாகவே இருந்தது.