பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 இத்தனைக்கும் ஒரு படத்தில் நடிப்பதற்கு அவர் அந்த நாளில் என்ன ஊதியம் வாங்கிக் கொண்டிருந்தார் என்கி lர்கள் - இப்போது சில நடிகர்கள் வாங்குவதாகச் சொல்கி றார்களே, மூன்று லட்சம், நான்கு லட்சம் என்று -அப்படியா வாங்கிக் கொண்டிருந்தார்? இல்லை. ஆனானப்பட்ட 'அம்பிகாபதிக்கே சேலம் சங்கர் பிலிம்சார் அப்போது அவருக்குக் கொடுத்த தொகை ரூபாய் பதினோராயிரம் தானாம்! இப்படிச் சில உண்மைகளை எடுத்துச் சொல்லும் போது சிலர், அந்தக்காலம் வேறு, இந்தக்காலம் வேறு' என்று சொல்லி, ஒரேயடியாக அந்த உண்மைகளைத் தார் பூசிமறைக்கப் பார்க்கிறார்கள். அது முற்றிலும் தவறானது மட்டுமல்ல; தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வது மாகும். ஏனெனில், காலம் வெவ்வேறான காலமாயிருக்க லாம்; அந்தந்தக் காலத்துக்கு ஏற்றாற் போல் பணத்தின் மதிப்பும் கூடலாம், குறையலாம். அதற்காக மனம் ஒரு சமயம் 'பித்தளை மன மாகவும் இன்னொரு சமயம் 'பொன்மனமாகவும் மாறிவிடக்கூடாது அல்லவா? அப்படி எந்த விதமான மாற்றத்துக்கும் உள்ளாகாத மனம் பாகவதருக்கு இருந்தது. அதுவே அவருடைய தனிச்சிறப்பு. அத்தகைய சிறப்பு வாய்ந்த நடிகர் பெருமகனார் ஒரு சமயம் 'திருநீலகண்ட'ருக்காக வெளிப்புறக் காட்சிகள் சிலவற்றை எடுப்பதற்காக வெயிலை எதிர்பார்த்து மரத்தடி நிழலில் உட்கார்ந்திருந்தபோது, 'ஐயா, தருமராசா!' என்று குரல் கொடுத்துக் கொண்டே அவரை நோக்கி வந்தாள் ஒரு கர்ப்பிணிப் பெண். "நான் யாரிடமும் என்னுடைய மனைவியை வைத்துச் சூதாடவில்லையே?’ என்றார் பாகவதர் சிரித்துக் கொண்டே.