பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161 'அந்த மாதிரி கதியெல்லாம் உங்களுக்கு வர வேணாம். மகாராசா நீங்க நல்லாயிருக்கணும்; உங்களாலே ஏழைங்க பிழைக்கணும்.” 'சரி, இப்போ எதுக்கு நீ என்னைத்தேடி வந்தே?" 'ஆஸ்பத்திரிக்குப் போறேன். புண்ணியவானே; கையிலே காலணா இல்லே!" 'புத்திர பாக்கியத்துக்கு உன்னை உள்ளாக்கிய புண்ணியவான் எங்கே போயிட்டாரு?" 'அவன் ஒரு சோமாறி, எங்கேயோ எதையோ திருடிவிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்' 'ஸ் அப்படியெல்லாம் பேசக்கூடாது. கல்லா னாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்' 'கல், கணவன்; புல், புருஷன், திருடன்?" 'அவனை என்ன சொல்றதுன்னு அந்தப் பெரிய வங்க சொல்லலையே?"என்று கையை விரித்தார் பாகவதர். பிச்சைக்காரி சிரித்தாள். 'உன்னால் சிரிக்கக்கூட முடிகிறதா? சிரி, சிரி' என்று சொல்லிக் கொண்டே தம் சிப்பந்திகளில் ஒருவரைக் கூப்பிட்டு, அவளிடம் ஒரு பத்து ரூபாய் கொடுக்கச் சொன்னார் பாகவதர். அதைப் பெற்றுக்கொண்டு அவள் இரண்டடிகள் எடுத்து வைத்ததுதான் தாமதம், 'ஏமாந்தீரா?" என்று சொல்லிக் கொண்டே அவரை நோக்கி வந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். 'ஏமாந்தேனா? நானா? யாரிடம் என்று பாகவதர் கேட்டார். 'இப்போது இங்கே வந்து போனாளே, அந்தப் பிச்சைக்காரியிடம்" 'ஓ, அதைச் சொல்கிறீர்களா? அவள் நிஜக் கர்ப்பினி இல்லை; வயிற்றில் தலையணையை வைத்துக் கட்டிக் எம்.கே.டி.11