பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

163 'அது என்ன ஆபத்து?' என்றார் பாகவதர். 'இரண்டு நாட்கள் பொறும் சொல்கிறேன்' என்றார் அவர். இரண்டு நாட்கள் சென்றன. 'ஏதோ ஆபத்து என்றீர்களே, அது என்ன ஆபத்து?” என்று அவரை மறக்காமல் கேட்டார் எம்.கே.டி. என். எஸ்.கே.பதிலுக்கு ஒன்றும் சொல்லாமல் தம் சட்டைப் பையில் படுபத்திரமாக மடித்து வைத்திருந்த ஒரு 'மஞ்சள் பத்திரிகை'யை எடுத்து அவருக்கு முன்னால் போட்டார். அதன் முதல் பக்கத்தில் வெளியாகியிருந்த ஒரு செய்தியைப் படித்தார் பாகவதர். அதற்கு மேல் பாகவதர் அந்தப் பத்திரிகையைப் படிக்கவில்லை. அப்படியே மடித்து என்.எஸ். கிருஷ்ண னிடம் கொடுத்துவிட்டு, ஒரு நீண்ட பெருமூச்சு விட்டார். 'இனி இது எதுக்கு என்னிடம்? உம்மிடம் காட்டத்தான் வைத்திருந்தேன்' என்று சொல்லிக்கொண்டே அதைக் கிழித்தெறிந்துவிட்டு, 'இம்மாதிரி பத்திரிகைக்காரர்களும் ஒரு விதத்தில் மக்களை ஏமாற்றித்தான் பிழைக்கிறார்கள், இல்லையா?" என்றார் என்.எஸ்.கே. 'என்ன இருந்தாலும் இப்படி ஏமாற்றிப் பிழைக்கக் கூடாது!" என்றார் எம்.கே.டி. வருத்தத்துடன், இந்தச் சம்பவம் நிகழ்ந்த சில நாட்களுக்கெல்லாம் 'திருநீலகண்டர் வெளியிடப்பட்டது. வழக்கம்போல் அதுவும் வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது ஒரு படம் 'இருபத்தைந்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் வெள்ளிவிழா கொண்டாடுகிறார்கள் அல்லவா? அப்போது இருபத்தைந்து வாரங்கள்' தொடர்ந்து ஓடினால்தான் 'வெள்ளி விழா கொண்டாடு வார்கள். அதன்படி திருநீலகண்ட'ருக்கும் வெள்ளி விழா