பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 ஆம், பிறருடைய பொறாமையை வளர்க்கும் ஆடம்பரத்தைக் கைவிட்டுவிட்டு, அவர் எளிமையில் இன்பம் காண ஆரம்பித்துவிட்டார். கொடையில் சிறந்த கோட்டையூரா!... பாகவதரின் உள்ளம் வலிமையானது மட்டுமல்ல; மென்மையானதும்கூட என்பதற்கு இதோ ஒர் உதாரணம்: ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் தம்முடைய ஒரே மகள் செல்வி உமையாளுக்கு டாக்டர் ஆர்.எம்.அழகப்பச் செட்டியார் அவர்கள் கோட்டையூரில் செய்து வைத்த திருமணத்தை இன்னும் கூட யாரும் மறந்திருக்கமாட்டார்கள். திருமணம் என்றால் ஒருநாள் திருமணமா, இரண்டு நாள் திருமணமா9- ஐந்து நாள் திருமணம். அந்த ஐந்து நாள் திருமணமும் வெறும் திருமண விழாவாக மட்டும் நடக்கவில்லை; இசை விழாவாகவும் நடந்தது. பகலில் தென்னிந்திய வித்வான்களின் கச்சேரிகள்; இரவில் வட இந்திய வித்வான்களின் கச்சேரிகள். இவ்வளவு கோலாகலமாக நடந்த அந்த இசைவிழா மேடையிலே அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கிகள் எத்தனை இருக்கும்? பத்து இருக்குமா, இருபது இருக்குமா?... அதெல்லாம் எந்த மூலைக்கு? அங்கே அமைக்கப் பட்டிருந்த ஒலிபெருக்கிகளின் மொத்த எண்ணிக்கை ஐம்பத்தாறு: கலியாணக் கச்சேரிதானே? அதைக் கேட்க வந்திருந்தவர்கள் எத்தனை பேர் இருக்கும்? ஆயிரம் இருக்குமா, ஐயாயிரம் இருக்குமா?... அவ்வளவுதான் இருந்தது மற்றவர்களின் கச்சேரி களில்; ஆனால் பாகவதரின் கச்சேரியிலோ...