பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அதனால்தானோ என்னவோ, குழந்தைகளுக்குள்ள அத்தனை குறும்புத்தனங்களும் நம் தியாகராஜனிடமும் இருந்தன. சுருக்கமாகச் சொல்லப்போனால் மற்ற வால்' களைப் போலவே அவனும் ஒரு வாலாயிருந்தான் இந்த வால் இன்னும் சில வால்களைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டு , ஒரு நாள் சர்க்கஸ் பார்க்கப் போயிற்று. சர்க்கஸ் பார்த்து முடிந்ததும் பேசாமல் வீடு திரும்பியிருக்கக் கூடாதா? அதுதான் இல்லை; அங்கிருந்த ஒரு குரங்குக் கூண்டைக் கண்டதும் அதைப் பார்த்தது. பார்த்தபடி அப்படியே நின்றது. இந்த வால் இல்லாத வால்களைக் கண்டதும், அந்த வால் இருந்த வாலுக்கு எப்படி இருந்ததோ என்னவோ, கிரீச், கிரீச் என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டே இப்படியும் அப்படியுமாகப் பாய்ந்து பாய்ந்துப் பல்லைக் காட்டிற்று. 'முன்னாள் மனிதக் குஞ்சான அதன் சேட்டைகள் இந்நாள் மனிதக் குஞ்சுகளான இவற்றுக்கு வேடிக்கையாக இருக்கவே, இவை அதற்குக் கடலை வாங்கிப் போடுவதும், அந்தக் கடலையை அது லாவகமாகப் பற்றிக் கொரிப்பதைப் பார்த்துக் கைகொட்டிச் சிரிப்பதுமாக இருந்தன. இந்த வால் இல்லாத வால்களைப் பின்பற்றி அந்த வால் இருந்த வாலும் கைகொட்டிச் சிரிக்க முயன்றது. என்ன முயன்றும் அவர்கள் கை கொட்டும் போது எழும்பும் சத்தம் தான் கை கொட்டும்போது எழும்பாமற் போகவே, அது தன் வாலை அடிக்கடி கூண்டுக்கு வெளியே நீட்டுவதும் அதை அவர்கள் தொட்டுப் பார்ப்பதற்காகக் கைகளை நீட்டும்போது உள்ளே இழுத்துக் கொண்டு இளிப்பதுமாக இருந்தது இந்த வேடிக்கை நெடு நேரம் நீடிக்கவில்லை; ஏழெட்டு முறை அந்தக் குரங்கால் ஏமாற்றப்பட்ட தியாகராஜனின் நண்பர்கள், அதைக் கோல் கொண்டு குத்தத் தொடங்கினார்கள். அவர்களுடைய இம்சை தாங்காமல்