பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 இதே மாதிரி, பாகவதரின் இன்னொரு 'மறக்க முடியாத கச்சேரி நாகர்கோயிலில் நடந்தது. அது எந்தச் சமயத்தில் என்கிறீர்களா? திரு என். எஸ்.கிருஷ்ணன் அங்கே புதுவீடுகட்டி, புதுமனை புகுவிழா நடத்திய சமயத்தில். அந்தக் கச்சேரிக்கு வந்திருந்தவர்களில் இருவர் விசேஷமாகக் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களில் ஒருவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை; இன்னொருவர் திருவாடுதுறை ராஜரத்தினம்பிள்ளை. 'எந்த ராஜரத்தினம் பிள்ளை? என்று இதற்குள் யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். 'சங்கீதச் சக்கரவர்த்தி என்று சொல்ல மனம் இல்லாமல் நாதசுவரச் சக்கரவர்த்தி' என்று சிலர் நாதசுவரம்' என்பதற்கு மட்டும் ஒரு தனி அழுத்தம் கொடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கி றார்களே, அந்த சங்கீதச் சக்கரவர்த்தி தான்! பாகவதருடைய பாட்டின் மயக்கமோ என்னவோ, அன்று சாட்சாத் ராஜரத்தினம் பிள்ளை சாட்சாத் ராஜரத்தினம் பிள்ளையாக நடந்து கொள்ளவில்லை; சாதாரண 'காலரி மாஸ்டர் போல் பாகவதருக்கு எதிர்த்தாற்போல் உட் கார்ந்து, ராதே, உனக்குக் கோபம் ஆகாதடி பாடுங்கள், உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ பாடுங்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தார்; பாகவதரும் புன்னகை யுடன் அவர் கேட்டுக் கொண்டிருந்த பாடல்களை யெல்லாம் ஒன்று விடாமல் பாடிக்கொண்டே இருந்தார். இதனால் என்ன ஆயிற்று என்கிறீர்கள்? 'பாகவதர் சாதாரண மக்களுக்காகப் பாடுகிறார்; நாங்களோ சங்கீத விற்பன்னர்களுக்காகப் பாடுகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்த சில மகா வித்வான்களின் கொட்டம் அடங்கிப்போயிற்று. கச்சேரி முடிந்தது. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை எழுந்தார்; பேசினார்: