பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 'இதற்கு முன் பாகவதரின் பாடல்கள் சிலவற்றை நான் கிராமபோன் ரிகார்டுகளின் வாயிலாகக் கேட்டிருக் கிறேன். இப்போதுதான் முதன்முறையாக நேரில் பாடக் கேட்கிறேன். முன்னது கத்தரிக்காய் வற்றலைச் சமைத்து சாப்பிடுவதுபோல் இருந்தது; பின்னது அன்று பறித்த கத்தரிக்காயை அன்றே சாப்பிடுவது போல் அவ்வளவு சுவையாக இருக்கிறது. காரணம், ரிகார்டு எடுக்கும்போது பாட்டைவிட நேரத்தைத்தான் அதிகமாகக் கவனிப்பார்கள்; குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட பாட்டைப் பாடி முடிக்க வேண்டும் என்பார்கள். இங்கே அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பாகவதரும் சுதந்திரமாகப் பாடினார்; நாமும் சுதந்திரமாகக் கேட்டோம். இதனால் எனக்கு இன்னும் ஒர் அனுகூலம் - இங்கே வரும்போது நான் நோயுற்று வந்திருந்தேன்; இப்போது அந்த நோய் நீங்கிப் போகப்போகிறேன். ஆம், பாகவதரின் சங்கீதம் என் நோய்க்கு யாரும் அளிக்க முடியாத சிகிச்சையை அளித்து விட்டது. ' கவிமணியின் நோயைப் போக்கிய பாகவதரின் சங்கீதம் கடைசி காலத்தில் அவருக்கு வந்துற்ற கண்ணின் நோயையும் போக்கியிருந்தால் எவ்வளவு நன்றாயிருந்தி ருக்கும்! மெஞ்ஞானத் தங்கமிது, மேலான தங்கமிது பாகவதருக்கும் திரு அண்ணாதுரைக்கும் ஏதாவது தொடர்பு உண்டா? இது என்ன கேள்வி, நிச்சயமாக உண்டு. அண்ணாதுரை திருச்சிக்கு வரும் போதெல்லாம் பாகவதரைப் பார்க்காமல் போகமாட்டார். அதுமட்டுமல்ல; அவரைப் பாட வைத்துக் கேட்காமலும் திரும்பமாட்டார். வெறும் அரசியல் தலைவர் மட்டும் அல்லவே அண்ணாதுரை? கலைஞரும் அல்லவா?