பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 எப்படி இருந்தார்? தம்மைச் சேர்ந்த சுற்றத்தாரிடையே எப்படி வாழ்ந்தார்? அதுவும் வியப்புக்குரியதே. பொதுவாக வறிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் வளமான வாழ்வு பெற்றால், தம்மைச் சேர்ந்த சுற்றத்தாருக் கெல்லாம் வேண்டாதவராகப் போய்விடுவது உலக இயல்பு. காரணம் பணந்தான்; அதைக்கொண்டு யாரை யாரால் திருப்தி செய்யமுடியும்? இந்த நிலையில், ஏதாவது நடக்க முடியாதது நடந்து விட்டால், அடேயப்பா, அசுர சாதனையாக அல்லவா இருக்கிறது. இது ' என்று சொல்லி மலைத்துக் கொண்டிருந்த பாகவதர், அந்த மலைப்புக்குரிய அசுர சாதனையையும் தாமே செய்தார். அதாவது, இன்று வரை தம் சுற்றத்தார் யாரும் தம்மைத் திட்டும்படியாக அவர் நடந்து கொள்ளவில்லை. மாறாக, அவருடைய மைத்துனர் ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்: 'தாம் வாழ்ந்த வாழ்வுக்கு அவர் தம் தங்கையை வளமான ஓர் இடம் தேடிக்கொடுத்திருக்கலாம். அவ்வாறு கொடுக்க அவர் விரும்பவில்லை; தம்மால் ஒரு வறியவ னாவது வளம் பெறட்டுமே!’ என்ற உன்னதமான நோக்கத்தோடு அவர் என்னைத் தேடித் தம் தங்கையைக் கொடுத்தார். ஐயாயிரம், பத்தாயிரம் அல்ல; எல்லாம் மலிவாக விற்ற அந்தக்காலத்திலேயே என்னுடைய கலியாணத்துக்கு அவர் ரூபா ஐம்பதாயிரத்துக்கு மேல் செலவுசெய்தார். அப்போதும் ஒரு நிலைக்கு வரமுடியாமல் நான் திணறிக்கொண்டிருந்தேன். இதை அறிந்த அவர் ஒவ்வொரு மாதமும் ஒண்ணாந்தேதியன்று எங்கள் வீட்டுக்கு வருவார். சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே பூஜை அறைக்குள் நுழைவார். அங்கே சாமி கும்பிடுவது