பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அது 'உர்ர், உர்ர் என்றது. அதன் வேதனையை விரும்பாத தியாகராஜன், 'வேண்டாம்டா, விளையாட்டு வினையாகி விடும்' என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். அவர்கள் கேட்கவில்லை. மேலும் மேலும் சேட்டை செய்து கொண்டே இருந்தார்கள். அதனால் பொறுமை இழந்த குரங்கு எப்படியோ கூட்டைத் திறந்து கொண்டு வெளியே வந்து அவர்கள் மேல் பாய்ந்தது. அவ்வளவுதான்; 'அம்மாடியோவ்?' என்று அலறியடித்துக் கொண்டே அத்தனை வால்களும் அங்கிருந்து எடுத்தன ஒட்டம்! குரங்கு அவர்களை விடவில்லை; துரத்து, துரத்து' என்று துரத்திக் கொண்டே சென்றது. கடைசியில்.... மற்ற பையன்களெல்லாம் எப்படியோ தப்பித்துக் கொண்டு விட, குழந்தை தியாகராஜன் மட்டும் ஏதோ ஒரு கல் தடுக்கி எதிர்த்தாற்போலிருந்த முட்கம்பி வேலியின் மேல் விழுந்துவிட்டான் அதன் பலன்?... அவனுடைய நெற்றியில் கம்பிமுள் பொத்துக் கொண்டு விட்டது. ரத்தம், ரத்தம், ஒரே ரத்தம்! அந்த நிலையிலும் அவன் தன் நெற்றியை அழுத்திப் பிடித்துக்கொண்டே தட்டுத் தடுமாறி எழுந்து ஓடினான், ஒடிக் கொண்டே இருந்தான் நீண்ட நேர ஓட்டத்துக்குப் பிறகு அவன் திரும்பிப் பார்த்தபோது, அவனுக்குப் பின்னால் அவனுடைய தோழர்களும் வந்து கொண்டிருக்கவில்லை. குரங்கும் வந்து கொண்டிருக்கவில்லை. 'நல்ல வேளை, பிழைத்தேன்' என்று பெருமூச்சுவிட்டுக் கொண்டே அவன் மெல்ல நடந்து வீட்டுக்கு வந்தான். 'என்னடா, நெற்றியில் காயம்? அப்பா அடித்து விட்டாரா?' என்றாள் தாயார்.