பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

177 மட்டும் தங்கள் குழந்தை குட்டிகளோடு ஒரு கிராமபோன் பெட்டியையும், ஓர் இசைத் தட்டையும் சேர்த்து எடுத்துக் கொண்டு ஓடுவார்கள். காரணம், அந்த வீட்டுச் சிறுமி. அவள் படுசுட்டி; கொஞ்சநேரம் சும்மா இருக்கமாட்டாள். ஆனால் இசை என்றால் அவளுக்கு இனிக்கும். ஜப்பானி யரின் குண்டு வீச்சுக்குப் பயந்துஓடிப் பாதுகாப்புக் குழியில் பதுங்கிக் கொள்ளும் போதுகூட அவள் சும்மா இருக்க மாட்டாள். வெளியே போகவேண்டுமென்று அழுவாள்; அடம் பிடிப்பாள். ஒடுபவளைத்தடுத்துப் பிடித்தால் திமிறுவாள். அப்போது அவளுடைய பெற்றோர் கையோடு கொண்டு வந்த கிராமபோன் பெட்டிக்குச் சாவி கொடுத்து, அதில் தாங்கள் எடுத்து வந்த இசைத்தட்டை வைத்துச் சுழல விடுவார்கள். அவ்வளவுதான்; அடுத்த நிமிஷ:மே அவளுடைய அழுகை நின்றுவிடும். அத்துடன் அவள் வெளியேபோக அடம் பிடிப்பதையும் விட்டுவிட்டு, இசைத் தட்டிலிருந்து வரும் இனிய கீதத்தைக் கேட்க ஆரம்பித்துவிடுவாள். அந்தக்கீதம் என்ன கீதம், தெரியுமா? எழிலிசை மன்னர் திரு எம்.கே. தியாகராஜபாகவதர் 'அசோக்குமாரில் பாடிய பூமியில் மானிட ஜென்மம் எடுத்தும் ஒர் ...' என்ற கீதம்தான். - ப. சரஸ்வதி. இப்படியாக ஜப்பானியர் குண்டு வீச்சிலிருந்து அந்தப் பால் மணம் மாறாப் பச்சிளங்குழந்தையைப் பாதுகாத்து வந்த அப்பாடல் அவளையும், அவளைப் போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகளைப் பெற்றெடுத்திருந்த தமிழர்களையும் மட்டும் கவரவில்லை; ஆங்கிலேயர் களையும் கவர்ந்தது. அதற்கு உதாரணம் வேண்டுமானால் வேறெங்கும் போகவேண்டியதில்லை; எலிபெண்ட்வாக்” என்ற ஆங்கிலப்படத்தைப் பார்த்தால்போதும். இலங்கையிலுள்ள தேயிலைத்தோட்டங்களில் தமிழர் எம்.கே.டி.12