பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வேலை செய்வதுபோல் அதில் ஒரு காட்சி வருகிறது. அந்தக் காட்சியில் அவர்கள் வேலை செய்து கொண்டே பாடும் பாட்டு என்ன என்கிறீர்கள்? - பூமியில் மானிட ஜென்மம் எடுத்தும் ஓர் ...' என்ற பாட்டுத்தான் இப்படியெல்லாம் புகழின் உச்சிக்கே போய்க் கொண்டிருந்த பாகவதரை வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க இந்த உலகத்திலுள்ள எல்லோருமே மகாத் மாக்களா, என்ன? அந்தமகாத்மாவுக்கே கோட்சே என்ற ஒரு துராத்மா எங்கிருந்தோ முளைத்தபோது, பாகவதருக்கு முளைக்கக் கேட்கவாவேண்டும் பல விரோதிகள் பல விதங்களில் முளைத்தார்கள். இதனால் அமைதியை இழந்த பாகவதர், இழந்த அமைதியை மீண்டும் பெறுவதற்காக எங்கெல்லாமோ சென்றார். அம்மாதிரி சமயங்களில் அவருக்கு உற்ற துணையாயிருந்தவர், இப்போது ஈரோடி லுள்ள உயர்தரப்பள்ளி யொன்றில் சங்கீத வாத்தியாரா யிருக்கும் திரு.ஏ.நாகரத்தினம் என்பவராவார். இவர் பாகவதரோடும், அவருடைய மூத்த தம்பி திரு கோவிந்தராஜ பாகவதரோடும் ஆலத்துர் சகோதர்களில் ஒருவரான திரு சுப்பய்யா என்பவரிடம் முறையாக சங்கீதம் பயின்றவர். இவரை வெறும் நண்பராக மட்டுமல்ல; தம் தம்பிகளில் ஒருவராகவே பாகவதர் கருதிவந்தார். இவர் அவர்பால் ஏற்பட்ட ஆன்ம நேயத்தால் அவரை அண்ணா, அண்ணா என்றே அழைத்துவந்தார். பின்னால் பிறருடைய வற்புறுத்தலுக்கு இணங்கி இவர் திருமணம் செய்து கொண்டாலும், இளமைப் பிராயத்தில் துறவறத்தில் பற்றுக்கொண்டு இவர் திருப்பராய்த்துறையிலுள்ள ராம கிருஷ்ண தபோவனத்தில் வாசம் செய்து வந்தார். அப்போது தபோவனத்தின் தலைவராயிருந்தவர் சுவாமி சித்பவா னந்தர். அவரிடம் அனுமதி பெற்று இவர் பாகவதருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தின் சுருக்கம் இது;