180 'திருச்சியிலிருந்து அந்தச் சேலம் நாகரத்தினத்துடன் அவர் எங்கேயோ போனாராம்' என்றார் ஒருவர். 'அந்தச் சாமியார் பயல் தன்னைப்போல் பாகவத ரையும் சாமியாராக்காமல் விடமாட்டான் போலிருக் கிறதே! என்றார் இன்னொருவர். சென்னையிலிருந்து வந்த யாத்திரிகர்கள் மூலம் இந்தச் செய்தியை அறிந்த நாகரத்தினம் இதைப் பொருட் படுத்தவில்லை. பாகவதரை அழைத்துக்கொண்டு காஞ்சிக்கு வந்தார். திரு அண்ணாதுரை திருச்சிக்கு வந்தால் எப்படிப் பாகவதரைப் பார்க்காமல் போக மாட்டாரோ, அப்படியே பாகவதரும் காஞ்சிக்கு வந்தால் அண்ணா துரையைப் பார்க்காமல் போகமாட்டார். அந்த வழக்கத்தை யொட்டிக் காஞ்சி வரதராஜப் பெருமாளைத்தரிசித்தது போலவே அண்ணா துரையையும் தரிசித்தார் பாகவதர். உண்மையான பக்தனுக்கு 'மனிதன் -தெய்வம்' என்ற வேறுபாடு ஏது? அவன் மனிதனில் தெய்வத்தையும், தெய்வத்தில் மனிதனையும் காணக்கூடியவனல்லவா? அதற்குப் பின்னும் அவர்கள் காஞ்சியோடு நிற்க வில்லை; தமிழ் நாட்டிலுள்ள அத்தனை தலங்களுக்கும் சென்றார்கள். அந்தந்தத் தலங்களுக்குரிய பாடல்களை மனம் உருகப் பாடி மனஅமைதி பெற்றார்கள். இந்தத் தீர்த்த யாத்திரையின் போதுதான் தருமபுர ஆதீனத்தில் கச்சேரி செய்யும் வாய்ப்பு பாகவதருக்குக் கிடைத்தது. அதன் காரணமாக எழிலிசை மன்னர் என்ற பட்டத்தையும் அவர் பெற்றார். இது தவறு என்றும், ஏழிசை மன்னர் என்பதுதான் சரி என்றும் சிலர் சொல்கிறார்கள். எதுவாயிருந்தால் என்ன? இரண்டு பட்டங்களுமே பாகவதருக்குப் பொருந்துமல்லவா?
பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/183
Appearance