பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 ஆஹா என்ன பேரானந்தம்!... உண்மை சில சமயம் பிரமை போலவும், பிரமை சில சமயம் உண்மை போலவும் தோற்றமளிப்பதுண்டு. இந்த மாயையில் முதலிடம் வகிப்பது சினிமா உலகம். அந்த உலகத்தைச் சேர்ந்த சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் ஏதோ விரோதம் போன்ற ஒரு பிரமை இப்போது அவர்களுடைய ரசிகர்களுக்கிடையே இருந்து வருகிறதல்லவா? அதற்காக வரட்டிக்கும், வயல்வெளி களுக்கும் பயன்படக்கூடிய மாட்டுச் சாணம் கூட வீணாகி வருகிறதல்லவா? அந்தப் பிரமை எம்.கே.டி பாகவதர், பி.யு. சின்னப்பா ஆகியோரின் ரசிகர்களுக்கிடையேயும் அந்த நாளில் இருந்து வந்தது. அதற்காக எம்.ஜி.ஆரும் சிவாஜி கணேசனும் இன்று தங்கள் அபிமானிகளிடம் சொல்லி வருவதுபோலவே சின்னப்பாவும், பாகவதரும் அன்று சொல்லி வரவேண்டியிருந்தது; 'பாகவதரா அவருடைய பாட்டென்றால் எனக்கு உயிர்; அவரும் நானும் இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னாலேயே பிரேமையில் மறந்து இருந்தோம்!" என்பதுபோல் சின்னப்பா ஏதாவது சொல்லிவைப்பார் தம் அபிமானிகளிடம். 'சின்னப்பாவா அவருடைய பாட்டைக் கேட்காமல் எனக்குத் தூக்கமே பிடிக்காது; எங்கள் நட்பு ஏழேழு ஜன்மத்துக்கும் யாராலும் பிரிக்கமுடியாதது!" என்பது போல் பாகவதரும் ஏதாவது சொல்லிவைப்பார் தம் அபிமானிகளிடம். இதைக் கேட்கும் அபிமானிகள் என்ன செய்வார்கள் பாவம். அவர்களும் அதை நம்புவதுபோல் நடித்துவிட்டுப் போவார்கள். அந்த நாளில் மட்டும் என்ன, இந்த நாளிலும் நடிப்பு, நாடகத்துறை, சினிமாத்துறையோடு நிற்காமல் வாழ்க்கைத்