பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 துறையிலும் இடம் பெற்றுத்தானே இருக்கிறது? இல்லா விட்டால் திருடன் கூட ‘நான் ஒரு சோஷலிஸ்ட்; இல்லாதவனுக்காக இருப்பவனிடமிருந்து திருடுகிறேன்!” என்று சொல்ல, நடிக்க ஆரம்பித்திருப்பானா? உண்மை என்னவென்றால், தொழில் எதுவா யிருந்தாலும் அதில் போட்டியும் பொறாமையும் இருப்பது இயற்கை; இருக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் எந்தத் தொழிலும் வளராது; வாழாது. நஞ்சைக்கூட ஓரளவுக்கு மருந்தில் சேர்த்துக்கொண்டால் அது உடற்பிணியைப் போக்கி உயிரைக் காக்கிறதல்லவா? அதே மாதிரி தான் போட்டியும் பொறாமையும் கூட ஒரளவுக்கு இருந்தால் அவை கலையைக் காக்கின்றன; கலைஞனையும் காக்கின்றன. இந்த உண்மையைச் சிலர் ஒப்புக் கொள்ளத் தயங்குவதால் என்ன நடக்கிறது? திரையிலும் மேடையிலும் நடிப்பது போதாதென்று வாழ்க்கையிலும் நடிக்க வேண்டியதாகிவிடுகிறது. பொதுவாக மனிதனுக்குள்ள பலவீனங்களில் இதுவும் ஒன்றுதான் என்றாலும், இதைச் சம்பந்தப்பட்ட நடிகர்களும் உணருவதில்லை; இதனால் அவர்கள் பொய்யை உண்மை போலவும், உண்மையைப் பொய்போலவும், பேச வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகி விடுகிறார்கள். இத்தகைய ரசிகர் ஒருவர் நெல்லை மாவட்டத்திலே இருந்தார். அவர் பி.யு.சின்னப்பாவின் படம் வந்தால் போதும், பார்க்காமல் இருக்கமாட்டார்; அவருடைய பாடல் எது வாயிருந்தாலும்கேட்காமல் விடமாட்டார். அதுமட்டுமா? நினைத்த போதெல்லாம் அவருடைய பாடல்களைக் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பதற்காக அந்தரசிகர் தம்வீட்டில் அதற்கென்றே ஒரு கிராமபோன் பெட்டியையும், அதில் போட்டுக் கேட்கச் சின்னப்பாவின் ரிகார்டுகளையும் ஒன்று விடாமல் வாங்கி வைத்திருந்தார்.