பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 பாகவதர் சிரித்தார்; ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டார் ரசிகர். 'சின்னப்பா நேரில் பாடக்கேட்டால் என்னுடைய ரிகார்டுகளைக் கூட இப்படித்தான் உடைத்தெறிந்து விடுவீர் களா, என்ன?" என்றார் எம்.கே.டி. ரசிகரின் முகம் சுருங்கிற்று; பாகவதர் மேலும் சொன்னார்; 'எந்த வகையில் பார்த்தாலும் இது அநியாயம் தொழில் முறையில் எனக்கும் சின்னப்பாவுக்குமிடையே ஒரளவு போட்டி இருக்கலாம்; பொறாமையும் இருக்கலாம். அதற்காக இந்த வெறியை என் மனம் தாங்காது. அத்துடன் நானும் அவரும் ஒரே பாணியில் பாடுபவர்கள்கூட அல்லவே? இருவரும் வேவ்வேறு பாணியிலல்லவா பாடு கிறோம்? உங்களைப் போன்ற ரசிகர்கள் எங்கள் இருவருடைய பாட ல் க ைள யு மே கேட்டு அனுபவிக்கலாமே!' இந்தச் சமயத்தில் என்.எஸ்.கே குறுக்கிட்டு, 'நேற்று வரை இவர் அப்படி அனுபவித்துக் கொண்டிருந்த வர்தான். இன்று என்னவோ தெரியவில்லை. நீங்கள் நேரில் பாடக் கேட்டதும் இப்படி ஒரு வெறி இவருக்கு வந்திருக்கிறது. அதனாலென்ன, நம்மைவிடவயதில் குறைந்த இவரிடம் நாமும் நமக்குள்ள நிதானத்தை எதிர்பார்க்கக் கூடாதல்லவா?"என்றார். மூவரும் சிரித்துக் கொண்டே உள்ளே போனார்கள். அந்த ரசிகர் யாராயிருக்கும் என்பதை நேயர்களில் பலர் இதற்குள் ஊகித்திருக்கக்கூடும் - அவரே முக்கூடல் பீடிச் சக்கர வர்த்தியாயிருந்து அண்மையில் மறைந்த திரு அரிராம் சேட். மறுநாள் காலை என். எஸ்.கே. ஏதோ வேலையாக அப்படியே நாகர்கோயிலுக்குப் போய்விட்டார். பாகவதர் மட்டும் தம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் ஒரு சிற்றுார். அதைக் கடந்து வரும்போது ரயில்வே கேட்" ஒன்று குறுக்கிடவே பாகவதரின் கார் நின்றது.