பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 யாரோ ஒரு கட்டை வண்டிக்காரன்; அருகிலிருந்த காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்துக் கொண்டு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். 'ஆஹா, என்ன பேரானந்தம்'... பாகவதரின் பாட்டுத்தான். ஆனால் பாடியவர் பாகவதர் அல்ல; கட்டை வண்டிக்காரன். காருக்கு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்த்தார் பாகவதர். அவ்வளவுதான்; ‘சாமி, நீங்களா?' என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக்கொண்டே அவன் வண்டியை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினான். 'எத்தனை நாளா என் சாமியைப் பார்க்கணும்னு நான் நெனைச்சிக் கிட்டு இருந்தேன்? - இன்னிக்குப் பார்த்துட்டேன் சாமி, என் கண் குளிரப் பார்த்துட்டேன் - இருங்க, சாமி! இன்னிக்கு என்கையாலே ஒரு சோடாவாச்சும் வாங்கிச் சாப்பிடாம நீங்க இங்கேயிருந்து போகவே கூடாது - ஆமாம்!' என்று படுகறாராகச் சொல்லிக்கொண்டே அவன் அங்குமிங்கும் ஓடினான்; எங்கிருந்தோ ஒரு கோலிச் சோடாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்து அவரிடம் நீட்டினான். "அவரு இந்தச் சோடாவையெல்லாம் குடிக்க மாட்டாரு, ஐயா!' என்றார் டிரைவர். 'இங்கே சோடாவா பெரிது, அதைக்கொடுக்கும் அன்புக் கையல்லவா பெரிது!’ என்று சொல்லிக் கொண்டே பாகவதர்காரைவிட்டுக் கீழே இறங்கி, வண்டிக்காரன் கொடுத்த சோடாவை இருகைகளாலும் வாங்கி, மடக், மடக் கென்று குடித்தார். பரம திருப்தி வண்டிக்காரனுக்கு; 'ஆஹா, என்ன பேரானந்தம்'என்று அவன் மறுபடியும் பாடவே ஆரம்பித்து விட்டான். { {