பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 அதற்குள் 'கூகுக் என்று கூவிக்கொண்டு ரயில் வந்து விடவே, டிரைவர் காரைக் கிளப்ப முயன்றார். என்ன ஆச்சரியம் பாகவதரைத் தம் பெட்டியிலிருந்தபடியே எப்படியோ பார்த்துவிட்ட கார்டு சிவப்புக்கொடி காட்டி ரயிலை நிறுத்திவிட்டு, 'ஆஹா, என்ன பேரானந்தம்' என்றார். அதைக்கேட்ட பாகவதரின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் நீரே துளிர்த்துவிட்டது. 'நீங்களெல்லாம் என்னிடம் இத்தனை அன்புகாட்ட உங்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன், என்ன செய்யப்போகிறேன்?' என்று கரம் குவித்தார். 'ஒன்றும் செய்யவேண்டாம். நீங்கள் ஆனந்தமாகப் பாடிக்கொண்டே இருங்கள்; நாங்கள் ஆனந்தமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்!' என்ற கார்டு பச்சைக்கொடி காட்டி ரயிலை அங்கிருந்து நகர்த்தினார். அந்த ரயிலுடன் பாகவதரின் இதயமும் நகர்ந்தது! கடவுள் பதம் பணிவது நமது கடன்... பாகவதருடன் நெருங்கிப் பழகிய சிலர் அவரைச் சித்தர் என்று சொல்வதுண்டு. எதற்காக தம் வாழ்நாளில் சித்தர் சிலருடன் அவர் தொடர்பு கொண்டிருந்ததற்காகவா? இல்லை, இந்த உலகத்தோடு அவர் ஒட்டியும் ஒட்டாமல் இருந்ததற்காக; சமூகத்தோடு அவர் சேர்ந்தும் சேராமல் சமாளித்தற்காக; குடும்பத்தோடு அவர் பட்டும் படாமல் வாழ்ந்ததற்காக. அப்படிப்பட்ட சித்தர், "எங்கேயாவது, எப்பொழு தாவது சொற்பொழிவு ஆற்றியதுண்டா? என்று இக்கால நடிகர்கள் சிலரை மனத்தில் வைத்துக்கொண்டு என்னைச் சிலர் எழுதிக் கேட்கிறார்கள்.