பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 ஆற்றியிருக்கிறார் - எங்கே, அரசியல் கூட்டங் களிலா? இல்லை. அந்த வம்புக்கே அவர் போவதில்லை. தம்முடைய துறையில் முன்னேற அது அவருக்கு அவசிய மாகவும் இருந்ததில்லை. அது மட்டுமல்ல; தம்மைப் பற்றியோ, தம்முடைய நடைமுறைகளைப் பற்றியோ பத்திரிகைகளுக்கு அவ்வப் போது செய்தி கொடுத்துக்கொண்டிருக்க அவர் யாரையும் தம் சொந்தப் பொறுப்பிலோ, கம்பெனிப் பொறுப்பிலோ மாதச் சம்பளத்தில் நியமித்துக்கொண்டதும் கிடையாது. இந்த நாளில் சகோதர எழுத்தாளர்களில் சிலர், வயிற்றுக்கொடுமையால் நட்சத்திரதாசர்களாக இருக்கும் அவல நிலையை நாம் பார்க்கிறோம். அவர்கள் இரவென்றும் பகலென்றும் பாராமல் பத்திரிக்கைக் காரியா லயங்களை நோக்கி ஒடு, ஒடு" என்று ஓடிக்கொண்டிருக்கி றார்கள். மிக்க சிரமத்துடன் அவர்களைத் தடுத்து நிறுத்தி'என்ன விஷயம்?' என்று விசாரித்தால், “ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம்' என்று இரைக்க இரைக்கச் சொல்லிக் கொண்டே அவர்கள் நிற்கிறார்கள். “உங்களில் தான் ஒருவன் அல்லனோ, என்னிடம் அது என்ன விஷயம், சொல்மீனோ? என்றால், 'அடா டாடாடா! இன்றைக்கு எங்கள் 'பாஸ் ஒரு தும்மல் போட்டார் பாருங்கள், பேஷானதும்மல் படு பிரமாதமான தும்மல் அந்த மாதிரி ஒருதும்மலை இதுவரை வேறு யாரும் போட்டு நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். சுற்றியிருந்தவர்க ளெல்லாம் சும்மா அப்படி அப்படியே சாய்ந்து சாய்ந்து விழுந்துவிட்டார்கள். அந்தப் பரபரப்பான செய்தியைப் பத்திரிகைகளுக்குக் கொடுத்துவிட்டுவரத் தான் இப்போது நான் பஞ்சாய்ப் பறந்து கொண்டிருக்கிறேன்!" என்று 'சகவாசதோஷத்தால் ஏற்பட்ட சாகசத்துடன் அவர்கள் சொல்கிறார்கள்.