188 'இதில் ஏன் இவருக்கு இவ்வளவு அக்கறை?" என்று நாம் வியக்கும்போது, 'சும்மா இல்லை, சுவாமி அதற்காக அவருக்கு மாதம் பிறந்தால் சம்பளம் உண்டு' என்கிறார் நம்மைவிட அவரை நன்கு அறிந்த ஒருவர். 'அப்படியா? ஏதோ காலத்தை ஒட்டட்டும்!" என்று நாம் திருப்தியுறுகிறோம்... இம்மாதிரி நாம் திருப்தியுறுவதற்காகக் கூடப் பாகவதர் யாரையும் தம்மிடம் வேலைக்கு அமர்த்திக் கொள்ளவில்லை. அதன் பலன்? - அவரைப் பற்றிய செய்திகள் பல பத்திரிகைகளுக்கு எட்டாமலே போய் விட்டன. இப்போது நாமே முனைந்து அவற்றைச் சேகரிக்கும் போது நமக்குக் கிடைப்பவை ஒரு சிலவே. அவ்வாறு நான் சேகரித்த செய்திகளிலிருந்து அவர் தம் வாழ்நாளில் பொது மக்களுக்கு முன்னால் இருமுறை பேசியதாகத் தெரிகிறது. ஒருமுறை இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தில், இன்னொரு முறை தமிழ் நாட்டைச் சேர்ந்த திருவையாற்றில். அதுவும் எதற்காக? - பேசித்தான் தீரவேண்டும்: என்ற நிர்ப்பந்தத்துக்காக. யாழ்ப்பாணத்தில் ஒரு கச்சேரி; உதவி நிதிக் கச்சேரி; எதற்காக? ஒரு கல்லூரிக்காக. புகழ் பெற்ற பக்க வாத்தியக்காரர்களுடன் பாகவதர் பாடினார்; கச்சேரி முடிந்தது. தலைவர் பேசுவதற்காக எழுந்தார். பாகவதரைப் பாராட்டு, பாராட்டு ' என்று பாராட்டித் தீர்த்த அவர், பக்க வாத்தியக்காரர்களைப் பாராட்ட மறந்தே விட்டார். இது பாகவதருக்கு என்னவோ போலிருந்தது; சர்க்கரை இல்லாமல் காப்பி சாப்பிட்டவர்போல் முகத்தை வைத்துக்கொண்டு எழுந்தார். 'எனக்குப் பாடித்தான்
பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/191
Appearance