பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 பழக்கம்; பேசிப் பழக்கம் இல்லை' என்ற அவையடக்கத் துடன் தம் பேச்சை ஆரம்பித்தார். 'உப்பி ல்லாமல் எந்த உணவும் ருசிக்காது; அதே மாதிரி பக்க வாத்தியக் காரர்கள் இல்லாமல் எந்தப்பாட்டும் ரசிக்காது. இங்கே நான் பாடிய அத்தனை பாடல்களும் உங்களை இன்பக் கடலில் ஆழ்த்திய தென்றால் அதற்கு நான் மட்டும் காரணமல்ல; பக்க வாத்தியக்காரர்களும் காரணமாவார்கள். அவர்கள் இல்லாமல் நான் இல்லை; நான் இல்லாமல் அவர்கள் இல்லை. பாட்டைத் தனியாக ரசிக்கமுடியும். இங்கே என்னைப் பாராட்டிப் பேசிய தலைவர், அவர்களைப் பாராட்டிப் பேசமறந்ததற்குக் கூட அவர்களுடைய வாசிப்பில் அவர் தம்மையே மறந்திருந்ததுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்' என்று அவர் தொடர்ந்தாரோ இல்லையோ, சபையில் எழுந்த கையொலி அடங்க நீண்ட நேரமாயிற்று. அடுத்தாற்போல் திருவையாற்றில்: இரவு எட்டுமணிக்குக் கச்சேரி, அந்தக் கச்சேரிக்குப் பஞ்ச நதீஸ்வரர் கோயில் தெற்குப் பிரகாரத்தில் உள்ள பொற்றாமரைக் குளத்தருகே ஓர் அழகான மேடை அமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்துக்குக் குறைவில்லை, திருவையாறே திரண்டிருந்தது. பாகவதர் பாடினார்; ஒவ்வொரு பாடலும் பஞ்சாமிர்தமாகச் சுவைத்தது. கச்சேரி முடிந்ததும் கோயில் நிர்வாகிகள் தெற்குக் கோபுர வாசலி லிருந்த ஆள்கொண்டார் சன்னிதிக்கு அவரை அழைத்துச் சென்றார்கள். பாகவதரின் வருகையை முன்னிட்டு அன்று ஆள் கொண்டாருக்கு விசேஷ அபிஷேக அலங்கார மெல்லாம் செய்யப்பட்டிருந்தது. குழந்தைகளும் குட்டி களுமாகக் கோயிலில் ஏகக் கூட்டம். ஆள் கொண்டாருக்கு ஆரத்தி காட்டிய கற்பூரத்தட்டை எடுத்துக்கொண்டு பாகவதரை நோக்கி வந்த அர்ச்சகர், குறுக்கே வந்து விழுந்த குழந்தைகளின் தலைகளில் குட்டி, அவர்களை விரட்டிக்