190 கொண்டு வந்தார். அதைப் பார்த்த பாகவதர் அந்தக் குட்டுக்கள் அத்தனையும் தம் தலையில் விழுந்தாற்போல் தடவிக்கொண்டார். சுற்றியிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை; முகத்தில் கேள்விக் குறியுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் ஆரத்தி அவரை நெருங்கிற்று; தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். விபூதி குங்குமத்தையும் எடுத்து அணிந்து கொண்டு, ஆள் கொண்டாரைப் பயபக்தியுடன் சேவித்தார். “கொஞ்சம் இருங்கள்' என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் கோயிலுக்குள் சென்ற அர்ச்சகர், பெரிய ரோஜாப்பூ மாலையுடன் திரும்பிவந்து, அதைப் பாகவதரின் கழுத்தில் போட்டுவிட்டு நின்றார். 'அன்பர்களே!' திடீரென்று இப்படி ஒரு குரல் ஒலித்ததும் பேசுவது யார்?' என்று தெரியாமல் எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து விழித்தனர். நான் தான் பேசுகிறேன், அன்பர்களே' என்றார் பாகவதர். உடனே எல்லோரும் அவரை நோக்கித் திரும்பினார்கள். 'எனக்கு ஒரு குருநாதர் அல்ல; பல குருநாதர்கள் உண்டு. அவர்களில் ஒருவர் கோடையிடி ராமசாமி பக்தர்.அவர் இந்த ஊர் மேலவீதியிலே குடியிருந்தார். நான் பத்துப் பன்னிரண்டு வயது பாலகனாக இருந்தபோது அவரிடம் சங்கீதம் கற்றுக் கொள்வதற்காக விடப்பட்டேன். அவர் எனக்குக் குருநாதர் மட்டுமல்ல; ஒரு விதத்தில் உறவினரும் கூட. ஆகவே அவர் ஏதாவது வாங்கித் தின்பதற்காக அடிக்கடி எனக்குக் காசு கொடுப்பார். அந்தக்காசை எடுத்துக்கொண்டு நான் இந்தக் கோயிலுக்கு வருவேன்; குங்கிலியம் வாங்கி, அதோ இருக்கிறதே, அந்த அக்கினிக்குழியில் போட்டுவிட்டு ஆள்கொண்டாரை
பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/193
Appearance