பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 வணங்கி ஆசிபெறுவேன். வெள்ளிக் கிழமைகளில் வட மாலை சாத்துவோரும், சிதறு தேங்காய் விடுவோருமாக இங்கே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். குழந்தைகளின் கூச்சல் தாங்காது. அவர்களில் சிலர் என்னுடைய பின்னலைப் பிடித்து இழுத்துவிட்டுச் சிரிப்பார்கள். அவர்களுக்கு அது சிரிப்பாயிருக்கும். எனக்கோ அது தாங்கமுடியாத வலியாயிருக்கும் - அழுவேன். அர்ச்சகர்இதே அர்ச்சகர்தான் - பூஜையை முடித்துக்கொண்டு பிரசாதம் வழங்குவதற்காக வெளியே வருவார். 'மாமா, மாமா எனக்கு மாமா, எனக்கு மாமா!' என்று குழந்தைகள் இவரைச் சூழ்ந்து கொள்ளும். இவரால் அவர்களைச் சமாளிக்க முடியாது. என்ன செய்வார், பாவம்! அவர்கள் கையில் இவர் பிரசாதமும் கொடுப்பார்; தலையில் குட்டும் கொடுப்பார். அந்தக் குட்டை அப்போது வாங்கியவர்களில் அடியேனும் ஒருவன். அன்று என்னைக்குட்டியவர் இன்று என்ன செய்கிறார்? எல்லோருக்கும் முன்னால் எனக்குப் பிரசாதம் வழங்கியதோடு, ரோஜாப்பூ மாலையையும் கொண்டுவந்து போட்டிருக்கிறார். இதெல்லாம் ஆள் கொண்டாரின் அருள்தான் என்றாலும், ஒன்றுமட்டும் உண்மை - அதாவது, இன்று இவரிடம் குட்டு வாங்கும் குழந்தைகள் நாளைக்கு என்னைப்போல் இவருடைய கையால் மாலையும் போட்டுக்கொள்ளலாமல்லவா?” பேசி முடித்த பாகவதர் பொருட்செறிவுடன் ஒரு சிரிப்புச் சிரித்தார்; அவரைத் தொடர்ந்து அர்ச்சகர் உள்பட எல்லோரும் சிரித்தார்கள். இப்போது புரிந்துவிட்டது - சிறிது நேரத்துக்கு முன்னால் அர்ச்சகர் தம்மை வழி மறித்த குழந்தைகளைக் குட்டும்போது பாகவதர் ஏன் தம்முடைய தலையைத் தடவிவிட்டுக் கொண்டார் என்று