193 இந்தப் படம் அந்த வருடத் தீபாவளியன்று வெளியாயிற்று. பாகவதர் அப்போது தம்முடைய திருச்சி மாளிகையிலே தீபாவளிக் கொள்ம்ாட்டத்தில் ஈடுபட் டிருந்தார். மாளிகை என்றால் சாதாரண மாளிகையா? 'எழிலிசை மன்னரு "க்கேற்ற 'எழில் மாளிகை அது. யுத்த காலத்தில் வெள்ளை ராணுவ அதிகாரிகள் தங்குவதற்காக அதைக் கொடுத்துதவியிருந்தார் பாகவதர். அந்த மாளிகை யின் வாசலில் வெள்ளையர்கள் என்ன எழுதிவைத்திருந் தார்களாம், தெரியுமா? 'உள்ளே வருபவர்கள் தயவு செய்து தங்கள் கால்களில் உள்ள பூட்சுகளைக் கழற்றி வெளியே வைத்துவிட்டுவரவும் என்று எழுதி வைத்திருந்தார்களாம். சாப்பிடும்போது கூடக் கால்களில் உள்ள பூட்சுகளைக் கழற்றாமல் சாப்பிடும் வழக்கமுடைய அவர்களையே அந்தமாளிகை அப்படி எழுதவைத்தது என்றால், அதன் அழகு எத்தகைய அழகாயிருந்திருக்க வேண்டும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். அந்த அழகு மாளிகையில் அழகழகான கார்கள் மட்டுமல்ல; வெண்குதிரை பூட்டிய வண்டியொன்றும் இருந்தது. புதுமையில் மட்டுமின்றிப் பழமையிலும் பற்று கொண்டிருந்த பாகவதருக்கு அந்த வண்டியில் ஏறிச்சவாரி செய்வதில் ஒர் ஆனந்தம். அந்த ஆனந்தம் காரணமாக அவர்தாம் விரும்பும்போதெல்லாம் அதில் ஏறி, அதைத் தாமே ஒட்டிச்செல்வதுண்டு. அந்த வழக்கத்தையொட்டி, தீபாவளியன்று சில நண்பர்களைநேரில் சென்று விசாரிக்கவேண்டுமென்று நினைத்த பாகவதர், குதிரை வண்டியில் போனார். நண்பர் களைப் பார்த்து விசாரித்து விட்டுத்திரும்பும்போது ஒரு விபத்து - ரோடு போடுவதற்காக வழியில் கொட்டி வைக்கப் பட்டிருந்த ஒரு கருங்கல் குவியலின் மேல் அவருடைய வண்டிச்சக்கரம் ஏறிற்று. அதிலிருந்து வண்டியைத் திருப்பப் பாகவதர்முயன்றார். அவ்வளவுதான் - வண்டி குடை எம்.கே.டி.13
பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/196
Appearance