பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சாய்ந்தது; அவரும் அதனுடன் சாய்ந்து கீழே விழுந்து விட்டார். அதன் பலன்-முழங்கால் இரண்டிலும் நல்ல அடி; தாமாக எழுந்து நிற்கக்கூட முடியவில்லை அவரால். நல்லவேளையாக இந்த விபத்து அவருடைய மாளிகைக்கு எதிர்த்தாற்போலவே நடந்ததால், இதைக் கண்டு வெளியே ஓடிவந்த நண்பர்களில் சிலர் அவரை அப்படியே தூக்கிக் கொண்டு உள்ளே பேனார்கள். உடனே டாக்டர் வரவழைக்கப்பட்டார். தக்க சிகிச்சைக்குப்பின் அவருடைய கால்கள் பழைய நிலைக்குத் திரும்பப் பத்துப் பதினைந்து நாட்கள் ஆயின. அதுவரை அவர் நொண்டி யாகவே இருக்க நேர்ந்தது. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், அன்று வெளியான "ஹரிதாஸ்’ படத்திலும் அவர் நொண்டி"யாக நடித்திருந்ததுதான் இந்த ஒற்றுமை , காரணமாக இதை அன்று பலர் 'அபசகுனமாகக் கருதினார்கள். ஆயினும் அமோக ஆதரவு. அதனால் மேலும் மேலும் வளர்ந்த பாகவதரின் புகழ் - எல்லாமாகச் சேர்ந்து அந்த 'அபசகுனத்தைப் பொய்யாக்கி வந்தன. அதற்கேற்றாற்போல் ஒரு படத்தில் நடிக்கும்போது இன்னொரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளமாட்டேன்’ என்று அதுவரை மறுத்துவந்த பாகவதரை, அந்த வருடம் சேர்ந்தாற்போல் பத்துப்படங்களில் நடிக்கப் படாதிபதிகள் எப்படியோ ஒத்துக் கொள்ள வைத்துவிட்டார்கள். அது மட்டுமல்ல; அதுவரை ஒரு படத்தில் நடிக்க ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துவந்தவர்கள், இப்போது இரண்டு லட்சம் ரூபாய் கொடுக்கவும் முன்வந்தார்கள். அதன் பயனாக ராஜயோகி, பூரீமுருகன், வால்மீகி, உதயணன், பக்தமேதா, பில்ஹணன், ஜீவகன், காளிதாஸ், நம்பியாண்டார் நம்பி