பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

195 போன்ற படங்களில் அவர் ஒரே சமயத்தில் ஓய்வொழி வில்லாமல் நடிக்க நேர்ந்தது. இப்படியாகப் பாகவதரின் புகழ் உச்சநிலையை அடைந்த அதே வருடத்தில், அவருடைய 'அந்தரங்க வாழ்க்கை'யைப்பற்றி - இந்த வாழ்க்கை பாகவதருக்கு மட்டும்தான் உண்டு என்பதில்லை; வசதி படைத்த எல்லோருக்குமே உண்டு. ஆனாலும் இதைப்பற்றித் தாறுமாறாக எழுதிப் பிழைப்பதற்கென்றே ஒரு சில 'மஞ்சள் பத்திரிகை'க்காரர்கள் இல்லையா? பாகம் அவர்களுடைய அவதூறும் உச்சநிலையை அடைந்தது. அவர்களில் அப்போது குறிப்பிடத் தக்கவரா யிருந்தவர் திரு சி.என். லட்சுமிகாந்தன். அவருக்கும் 'அந்தரங்க வாழ்க்கை ' என்று ஒன்று இருந்திருக்கலாம். அதற்கு வேண்டிய வசதி மட்டும் இருந்திருந்தால்! - பாக வதரின் போதாத காலம், அந்த வசதி அவருக்கு இல்லாமற் போய்விட்டது! பர் இவரைப் பற்றியும், இவரால் பாகவதர் அடைந்த கஷ்டநஷ்டங்களைப்பற்றியும் அன்றைய சினிமாப் பத்திரிகைகளில் ஒன்று வருடம், மாதம், தேதியுடன் பின்வருமாறு எழுதியிருந்தது: பாபா "... உலகமே ஒரு நாடகமேடை என்பார்கள்; அந்த நாடகமேடையில் நாளை என்ன நடக்கும்?' என்பதை யார் அறிவார்? புகழின் உச்சியை அடைந்த பாகவதரின் காலடியில் ஓர் அதல பாதாளம் இருந்ததை அப்போது யாரும் காணவில்லை . திரு லட்சுமிகாந்தன் 1944ம் வருடம் நவம்பர் மாதம் 8ந்தேதி கத்தியால் குத்தப்பட்டு மாண்டார். 'திருவாழத்தான் இருந்தும் கெடுத்தான்; செத்தும் கெடுத்தான்' என்பார்கள். அதுபோல லட்சுமிகாந்தன் உயிருடன் இருந்ததைவிட இறந்து போனது பாகவதரைப் பல இன்னல்களுக்கு உள்ளாக்கி விட்டது. டிசம்பர் மாதம்