பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

196 27ந்தேதியன்ற பாகவதர் கைது செய்யப்பட்டார். முதலில் வலர் ஜாமீனில் விடப்பட்டார் என்றாலும், பின்னால்அதாவது 1945-ம் வருடம் பிப்ரவரி மாதம் 12-ந்தேதி ஜாமீன் ரத்துச் செய்யப்பட்டு, அவர் மீண்டும் காவலில் வைக்கப்பட்டார். தன் தமிழ்நாட்டிலேயே மிகுந்த பரபரப்பை உண்டாக்கிய வழக்குகளில் பாகவதர் வழக்குக்குத்தான் முதல் இடம் கொடுக்கவேண்டும். பம்பாயிலிருந்து இந்த வழக்குக்காகவே வரவழைக்கப்பட்டிருந்த திரு கே.எம்.முன்ஷியும், சென்னையைச் சேர்ந்த பிரபல வக்கீல்களில் சிலரும் ஒன்று கூடி இதில் வாதித்தனர். ஆயினும் 1945-ம் வருடம் மே மாதம் 3-ம் தேதியன்று தீர்ப்புகட கூறப்பட்ட இவ்வழக்கில், பாகவதருக்குத் தீவாந்தரத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. - - இந்தத்தண்டனைக்குப் பிறகு பாகவதரும் மற்ற எதிரிகளும் 'அப்பீல்' செய்து கொண்டனர். அப்பீல் வழக்கை அப்போது பிரதம நீதிபதியாயிருந்த ஸர்லயனல் லீச்சும், நீதிபதி லட்சுமண ராவும் விசாரணை செய்து, அப்பீலைத் தள்ளி விட்டுத் தண்டனையை உறுதிப்படுத்தினர். எதிர்பாராத விதமாகப் பாகவதருக்கு நேர்ந்த இந்த கஷ்டத்தைக் கண்டு சினிமா ரசிகர்கள் மனம் வெதும்பினர். அவரிடம் கருணை காட்டி, அவரை விடுதலைசெய்ய வேண்டும் என்று அங்கங்கே கூட்டங்கள் போட்டுக் கேட்டுக் கொண்டனர். பாகவதரின் திடீர் மறைவால் அன்றைய படத் தொழில் பெரிய அதிர்ச்சிக்குள்ளாகியது. ஏன், ஸ்தம்பித்து விட்டது என்று கூடச் சொல்லலாம். இந்த நிலையில் அவருக்கு முன்பணம் கொடுத்திருந்த முதலாளிகளில் சிலர், மேலே என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர்; திண்டாடினர்.