பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கருவிகளில் ஒன்றான ஊதுகுழலுமல்லவா தவறாமல் இடம் பெற்று வந்தன? உண்மை தெரியாத உலகம், பொய் பேச மட்டும் அஞ்சவே அஞ்சாதோ? அரே, கிருஷ்ணா முகுந்தா, முராரி! 'ஞானக்கண் பெற்ற குழந்தை தியாகராசன் அதற்குப் பின்னால் போக்கிரிப் பயல்களுடன் சேராமல் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக அவன் தம்பி கோவிந்தராஜனுடன் கூடச் சேராமல் இருந்துவிட முடியுமா? - சேர்ந்தான். அதன் பலன்? அதை ஏன் கேட்கிறீர்கள் ஒரு நாள் அவன்தன் அருமைத்தம்பியைக் கூப்பிட்டு 'தம்பி, தம்பி ஒரு ரகசியம்' என்றான்; 'என்ன ரகசியம்' என்று கேட்டான் கோவிந்தராஜன். 'சொல்கிறேன்; யாரிடமும் சொல்லக் கூடாது' என்றான், அவன். 'இல்லை; சொல்லவில்லை' என்றான் இவன். 'உடனே அண்ணன் ஒரு தென்னங்குச்சியை எடுத்து வாயில் கவ்விக்கெர்ண்டு அங்கிருந்து பெஞ்சின்மேல் அப்படியே ஒரு தாவுத்தாவி ஏறினான்; அங்கிருந்து கீழே கையை நீட்டியவாறு குதித்து, 'என்ன, புரிந்ததா? ' என்றான். 'இல்லை' என்றான் தம்பி. 'சரி; இப்பொழுதாவது புரிகிறதா, பார்?' என்று அவன் தன் வாய்க்குள் சீழ்க்கை அடிப்பது போல் விரலை வளைத்து வைத்துக்கொண்டு, 'ஆய், ஊய்!” என்றான். "என்ன ஆய், ஊய்?" என்றான் இவன் அப்போதும் ஒன்றும் புரியாமல். எம்.கே.டி.2