பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

197 இதை அறிந்த பாகவதர் தம்மைப் பார்க்க வந்திருந்த தம் குடும்பத்தாரிடம் சொன்னார்: - நம்முடைய சொத்துக்கள் அத்தனையையும் நாம் இழக்க நேர்ந்தாலும் சரி, அவற்றை விற்று எனக்கு யார் யார் முன் பணம் கொடுத்திருக்கிறார்களோ, அவர்களுக் கெல்லாம் அவர்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள். என்னால் யாருக்கும் எந்த விதமான கஷ்டமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். - பாகவதர் சொன்னது சொன்னபடி, அவருடைய குடும்பத்தார் பணத்தைத் திருப்பி கொடுக்கவந்தபோது, ஒரே ஒருவரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் ஒரு கைக்கு இருகைகளாக நீட்டித் தாங்கள் கொடுத்த முன்பணத்தை வாங்கிக் கொண்டார்களாம். வாங்காத அந்த ஒரே ஒருவர் மட்டும் யார்?... அவர் தான் தமிழ்நாட்டு சினிமா உலகில் 'லேனா' என்று சில வருடங்களுக்கு முன்னால் பிரசித்தி பெற்றிருந்து, காலவித்தியாசத்தால் இப்போது இருக்குமிடம் தெரியாமல் இருக்கும் மானகிரி திரு இலட்சுமணன் செட்டியார் என்பவராவார். அவர் அப்போது சொன்னது இது: "எனக்குப் பணம் பெரிதல்ல; பாகவதரின் குணம் தான் பெரிது. அவருக்கு இப்படி ஒரு கஷ்டம் நேர்ந்திருக்கும் இந்தச் சமயத்தில் மேற்கொண்டு ஏதும் கொடுக்கக்கூடிய நிலையில் நான் இல்லையே என்பதற்காகத்தான் நான் இப்போது வருந்துகிறேனே தவிர, கொடுத்த பணத்தை எப்படித் திரும்ப வாங்குவது என்பதற்காக நான் வருந்தவு மில்லை; வாடவும் இல்லை. நீங்கள் போய் அவரை விடுதலை செய்வதற்கான வேறு வழிவகைகளைத் தேடுங்கள்.