பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 'கட் கட், பட் பட்' என்றான் அண்ணன், தன் கையிலிருந்த தென்னங்குச்சியை வாள் வீசுவதுபோல் iசிக்கொண்டே. "அப்படியென்றால்?" என்றான் தம்பி, தலையைச் 'சொறி, சொறி என்று சொரிந்துகொண்டே. 'போடா, மண்டு கும் கும், தம் தம் என்று கட்டிலின்மேல் கிடந்த தலையணையைக் குத்து, குத்து’ என்று குத்திக் காட்டி, 'இப்போதாவது புரிந்ததா' என்றான் தியாகராஜன். 'இல்லையே! ' என்றான் கோவிந்தராஜன், அழாக் குறையாக. 'ஐயோ, ஐயோ விட்டல் நடித்த படம் வந்திருக்குடா (இப்போதைய பிரபாத்) சினிமா சென்டரலிலே. இன்னிக்கு ராத்திரி அப்பா படுக்கையைப் போட்டதும் நம்ம ரெண்டு பேரும் நைசாநழுவிவிடலாமா? படத்தைப் பார்த்துவிட்டு வந்து அவருக்குத் தெரியாமல் படுத்துக்கொண்டு விடலாம். என்ன சொல்றே?" இப்போதுதான் தம்பிக்கு விஷயம் புரிந்தது; "ரைட்டோ!' என்றான் ஒரு குதி குதித்து. 'ஓ கே!' என்றான் அண்ணன். போட்ட திட்டம் போட்ட படியே நடந்தது. அப்பா குழந்தைகள் இருவருக்கும் படுக்கையை விரித்துவிட்டுத் தாமும் படுக்கையை விரித்துப் படுத்தார். இருவரும் ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளைகளைப் போல அவருக்குப்பக்கத்தில் சுருண்டு படுத்துக் கொண்டார்கள். அவர்சற்றே கண்ணயர்ந்தது தான் தாமதம், இருவரும் மெல்ல எழுந்தார்கள். அந்தச்சமயம் பார்த்துத்தானா, 'என்னடா காற்றையே காணோம்? எங்கே விசிறி?" என்று கேட்டுக் கொண்டே அவர் புரண்டு படுத்தார். திடுக்கிட்ட கோவிந்தராஜன் மீண்டும் படுத்துக் கொண்டு விட்டான். தியாகராஜனோ அப்பாவின்