பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பாவம், என்ன செய்வான் தியாகராஜன், இப்படித் திரும்பி அப்பாவுக்கு அவசரமாக விசிறுவதும், அப்படித் திரும்பித் தம்பியின் வாயை அவசரம் அவசரமாகப் பொத்து வதுமாகத் தவியாய் தவித்தான்! அதற்குள், என்னடா அது? யாரை அவன் 'உதை, குத்து' என்கிறான்?' என்றார் அப்பா, சற்றே தூக்கம் கலைந்து. - அவ்வளவுதான்; புயல் வேகத்தில் அவருக்கு விசிறிக் கொண்டே, 'ஒன்றுமில்லை, அப்பா பஜனை அப்பா அரேகிருஷ்ணா முகுந்தா, முராரி அரே கிருஷ்ணா முகுந்தா, முராரி' என்ற பஜனைப் பாடலை அப்போதே படுவேகமாகப் பாட ஆரம்பித்துவிட்டான் தியாகராஜன் ஏன் தெரியுமா? அந்தப் பஜனையிலாவது அவனுடைய உளறல் அப்பாவின் காதில் விழாமல் இருக்காதா என்ற நப்பாசையால்தான். ஆனால் நடந்ததோ?... 'என்னடா, அவன் 'அடி, உதை' என்கிறான்! நீ பஜனை, அது இது என்று சொல்லிக்கொண்டு 'அரே கிருஷ்ணா, முகுந்தா, முராரி என்கிறாய்? என்ன விஷயம்? என்ன நடந்தது?" என்று கேட்டுக்கொண்டே எழுந்து உட்கார்ந்து தியாகராஜனின் கையிலிருந்த விசிறியை மெல்ல வாங்கி, அதன் மட்டையைத் தயாராகத் திருப்பி வைத்துக் கொண்டு, கோவிந்தராஜனைத்தட்டி எழுப்பி விசாரிக்க ஆரம்பித்துவிட்டார் அப்பா அந்த விசாரணையின் முடிவில் 7... எந்த விஷயம் அப்பாவுக்குத் தெரியக்கூடாது என்று தியாகராஜன் நினைத்தானோ, அந்த விஷயம் அசட்டுத்தம்பி கோவிந்தராஜனால் அம்பலமாகிவிட்டது. அதற்கு மேல் சொல்லவா வேண்டும். ஏற்கெனவே தயாராயிருந்த விசிறி மட்டை சகோதரர்கள் இருவரையும் சேர்ந்தாற்போல் பதம் பார்க்க ஆரம்பித்து விட்டது