பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஒருவர் வந்தார்; அவருக்காகத் திரை கொஞ்சமாக அல்ல; கொஞ்சம் தாராளமாகவே விலகிற்று. - ஆகா! நம்பிக்கையொளி வீசும் அந்த நாமதாரியைத் தரிசித்தது தான் தாமதம்; தியாகராஜன் தன்னை மறந்து பாட ஆரம்பித்து விட்டான் - ஒரு பாட்டு, இரண்டு பாட்டு, மூன்று பாட்டு... அவனை நிறுத்தவிடவில்லை அதற்குள் அங்கே சேர்ந்து விட்ட பக்தர் கூட்டம். 'பாடு 1ம், பாடு மேலே பாடு மேலே மேலே பாடு! நீ பாடிக்கொண்டே இரு; நாங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்'என்று அவன்னச் சுற்றிச் சப்பணம் போட்டு உட்கார்ந்து விட்டார்கள் பார்த்தார் தகப்பனார்; பாடும், பாடு, என்ற இத்தனை பேரை மெய்ம்றந்து சொல்லவைக்கும் இவனுடைய பாட்டை, நிறுத்தும், நிறுத்து' என்றல்ல்வா நாம் சொல்லிக் கொண்டிருந்தோம்? என்ன மதிiனம்! இப்படி எண்ணி வருந்திய அவர், தம்மையும் மீறிய ஏதோ ஒர் உணர்ச்சியால் கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிய நின்றார். - அதற்குள், "ஆகா திவ்வியமான கானம் தெய்வீக மான கானம் தேவாமிருதமான கானம்' என்று வாய் விட்டுச் சொல்லிக்கொண்டே அங்கே வந்து சேர்ந்த கோயில் பேஷ்கார், 'நீங்கள்தானா பெறற்கரிய இந்தப் பிள்ளையைப் பெற்றவர் என்றார் கிருஷ்ணமூர்த்தியை நோக்கி. "அடியேன்தான்' என்றார்.அவர் அடக்கத்துடனும், அதே சமயத்தில் அளவிட முடியாத ஆனந்தத்துடனும். 'இந்தாருங்கள், எம்பெருமான் திருச்சூரணம். இதைக் குழந்தையின் நாவில் தடவுங்கள். கண்ணனின் வேணுகானத்துக்கு இருந்த மகிமை உங்கள் குழந்தையின் தேவகானத்துக்கும் இருக்கும்' என்று சொல்லிக் கொண்டே தாம் கையோடு கொண்டு வந்திருந்த திருச்சூரணத்தை எடுத்துக் கிருஷ்ணமூர்த்தி நீட்டிய கையில் வைத்தார்.