பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 அதைக் கண்ணில் ஒற்றி எடுத்து, அவர் சொன்னது சொன்னபடியே குழைத்து, குழந்தை தியாகராஜனின் நாவில் தடவினார் கிருஷ்ணமூர்த்தி. அதற்குப் பின் அவனுடைய கானத்தில் வெறும் தேன்.மட்டும் கலந்திருப்பதாகத் தோன்றவில்லை அவருக்கு; பாலும் கலந்திருப்பதாகத் தோன்றிற்று! 'போதும் என்று சொல்ல எனக்கு வாய் வரவில்லை; ஆனாலும் சொல்கிறேன். குழந்தைக்குத் திருஷ்டிபட்டு விடக் கூடாதே என்பதற்காக, போய் வாருங்கள்; வீட்டுக்குப் போனதும் இவன் அன்னையிடம் சொல்லி இவனுக்கு திருஷ்டி கழிக்கச் சொல்லுங்கள்' என்று தியாகராஜனை ஆசீர்வதித்தார் பேஷ்கார். அவருடைய ஆசீர்வாதத்துடன்தம் மகனை அழைத்துக் கொண்டு திருச்சிக்கு வந்து சேர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி. மகனைக் கண்டதும் மாணிக்கத் தம்மாளின் வயிறு மட்டும் அல்ல. மனமும் குளிர்ந்தது. இழந்த கண்ணை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் அவள் அவனுக்கு யாரும் சொல்லாமலே திருஷ்டி கழித்து நெட்டி முறித்தாள் அன்னையும் தந்தையும் தானே... தன் வழியிலிருந்து தந்தை விலகிக்கொண்ட பிறகு, திருச்சி நகரத்தில் தியாகராஜன் கலந்து கொள்ளாத பஜனை கோஷ்டியே இல்லையென்று ஆயிற்று. ஒவ்வொரு கோஷ்டியினரும் 'நான் முந்தி, நீ முந்தி' என்று போட்டி போட்டுக்கொண்டு அவனை அழைத்துச் சென்றார்கள். காரணம் வேறொன்றும் இல்லை; சுண்டலும் வடையும் இல்லாமலே தியாகராஜன் கலந்து கொண்ட பஜனைக்குக் கூட்டம் சேர்ந்ததுதான்! 'என் அண்ணார் எதையும் தேடிப்போனவர் அல்ல; எல்லாமே அவரைத் தேடிவந்தவைதான்' என்று பாக