பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 வதரின் சகோதரர்களில் ஒருவரான திரு.சண்முகம் சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் தம் தோளை உயர்த்திச் சொல்வதுண்டு. அதுஓரளவு உண்மை தான் - அந்த நிலை சினிமா உலகில் பிரவேசித்த பிறகு பாகவதருக்கு வர வில்லை. பிரவேசிப்பதற்கு முன்னாலேயே வந்துவிட்டது. இதை வைத்துத்தான் திரு என். எஸ்.கிருஷ்ணன் ஒருமுறை மனம் விட்டுச் சொன்னார்: 'மக்கள் பாகவதரைத் தேடிக்கொண்டு வருகிறார் கள்; நானோ அவர்களைத் தேடிக்கொண்டு போகிறேன்" ஆகா! கலைவாணரைத் தவிர வேறு யாரால் இசைவாணரைப் பற்றி இரண்டே வார்த்தைகளில் இப்படி ஒரு கருத்தை உதிர்க்க முடியும்? திருச்சி நகரத்தில் பரவிய தியாகராஜன் புகழ் திரு எப்.ஜி.நடேசய்யரின் காதுக்கு எட்டியது. 'யார் இந்த நடேசய்யர்' என்கிறீர்களா? சொல்கிறேன்; ரயில் இலாகாவில் வேலைபார்த்துக்கொண்டே 'ரசிக ரஞ்சனி சபா என்று ஒரு சபாவை அந்த நாளிலேயே திருச்சியில் நிறுவி, பல அமெச்சூர் நாடகங்களை அரங்கேற்றி, காசில் மட்டுமே கண்ணை வைக்காமல் கலைத் தொண்டு புரிந்தவர் அவர். அது மட்டும் அல்ல; தம்மால் அரங்கேற்றப்படும் நாடகங்களில் அவர் ஏதாவது ஒரு வேடம் தாங்கி நடிப்பதும் உண்டு. அந்த நடேசய்யர் ஒருநாள் கிருஷ்ணமூர்த்தியைத் தேடி வந்தார். எந்தக் கிருஷ்ணமூர்த்தியை7 தியாகராஜாவின் அப்பாவான கிருஷ்ணமூர்த்தியைத்தான் எதிர்பாராமல் தம் வீட்டுக்கு வந்த அவரை, வரவேணும், வரவேணும்!'என்று எழுந்து நின்று, இருகைகளையும் கூப்பி வரவேற்றார் கிருஷ்ணமூர்த்தி. தம்மைக் கண்டதும் இவ்வளவு பவ்யமாக வர வேற்ற அவரை 'உட்காருங்கள் என்று சொல்லிக் கொண்டே நடேசய்யரும் உட்கார்ந்தார்.