பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 'இந்த ஏழையைத் தேடி... ' என்று இழுத்தார் கிருஷ்ணமூர்த்தி. 'ஏழை என்ன சுவாமி, ஏழை பணம் இல்லை’ என்ற ஒரே காரணத்துக்காக ஒருவன் ஏழையாகி விடு வானா? அதெல்லாம் ஒன்றுமில்லை; ஒரு செல்வம் இல்லையென் றால் இன்னொரு செல்வம்' 'அப்படி ஒரு செல்வமும் அடியேனுக்கு இருப்பதாகத் தெரியவில்லையே!” 'ஏன் இல்லை? உமக்குத்தான் பொருட் செல்வம் இல்லையென்றாலும் அருட்செல்வம் வேண்டிய மட்டும் இருக்கிறதே, ஐயா! இல்லாவிட்டால் அப்படி ஒரு மணியான பிள்ளை உமக்குப் பிறந்திருக்குமா?" 'எனக்கு மூன்று பிள்ளைகள்; எந்தப் பிள்ளையைச் சொல்கிறீர்கள் நீங்கள்?" 'ஏன், உம்முடைய மூத்த பிள்ளை தியாக ராஜனைத்தான் சொல்கிறேன். அவன் தேவாரம் பாடினால் ஞானப்பால் குடித்துப் பாடிய அந்தத் திருஞானசம்பந்தனின் நினைவு அல்லவா வருகிறது எனக்கு' 'ஏதோ, பெரியோர் ஆசீர்வாதம். அப்படியே இருக்கட்டும். ' 'வெறும் ஆசீர்வாதம் மட்டும் செய்துவிட்டுப் போக நான் இவ்வளவு தூரம் வரவில்லை; எனக்கு ஒரு பையன் வேண்டும். ஆமாம்! அவன் எப்படிப்பட்ட பையனா யிருக்க வேண்டும் தெரியுமா? இந்த ரசிக மகா ஜனங்கள் இருக்கிறார்களே, ரசிக மகா ஜனங்கள் - இவர்கள் அவன் சிரித்தால் தாங்களும் சிரிக்க வேண்டும்; அவன் அழுதால் தாங்களும் அழ வேண்டும். அவனை யாராவது அடித்தால் இவர்கள் உடனே எழுந்து சென்று அவனை அடித்தவனை அடித்து நொறுக்கத் துடிக்க வேண்டும்; அவனை யாராவது கொன்றால் இவர்கள் உடனே பாய்ந்து சென்று அவனை