பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 அவளுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தான். அந்தப் பாட்டை அவன் பாவத்தோடு பாடிய விதமும், அந்த பாவத்துக்கேற்ப அவன் நடித்தவிதமும், அதைப் பார்த்துக் கொண்டிருந்தோரை என்ன செய்தனவோ என்னவோ, அவர்களில் சிலர், 'இந்தக் குழந்தையை இப்படிப்பட்ட பசிக் கொடுமைக்கு உள்ளாக்கிய அந்த மாபாவி கால கண்டன் எங்கே இருக்கிறான்? அவனை இழுத்து வாருங்கள் இப்படி; சிண்டைப் பிய்த்து எறிந்து விடுகிறோம்' என்று கத்திக்கொண்டே மேடையின் மேல் தாவி ஏற ஆரம்பித்து விட்டார்கள். அவ்வளவுதான்; திரை விழுந்தது. காலகண்டர் வேடம் தாங்கி நின்றவர் அவசரஅவசரமாகத் தம்முடைய வேட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, எந்தப்பக்கம் ஒடுவது? என்று தெரியாமல் இப்படியும் அப்படியுமாகப் பாய்ந்து பாய்ந்து ஓடினார்: தர்மசங்கடமாகப் போய்விட்டது. நடேசய்யருக்கு; 'ஐயா இது நிஜமாக நடக்கவில்லை, ஐயா நாடகத்துக்காகப் பையன் அப்படி நடிக்கிறான், ஐயா! உட்காருங்கள்; தயவு செய்து உட்காருங்கள். அமைதி, அமைதி!' என்று கையமர்த்தி அவர்களை உட்கார வைப்பதற்குள் அவர் பாடு 'போதும், போதும் என்று ஆகிவிட்டது. அதற்குமேல்தான் 'ஒ, இது நாடகமா? நிஜமாக அப்படி யொன்றும் நடக்கவில்லையா?' என்று அவர்கள் தங்களைத் தாங்களே அசடு வழியக் கேட்டுக்கொண்டே உட்கார்ந்தார்கள். 'அதுதானே பார்த்தேன், பையனை அப்படிப் பொறுக்கிப் போட்டிருக்கிறார்கள் ரசிக ரஞ்சனி சபையார்' என்றார் அவர்களில் ஒருவர். 'நடேசய்யர் செலக்ஷன்' என்றால் சும்மாவா? ' என்றார் இன்னொருவர். எம்.கே.டி.3