பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தியாகராஜனின் கையைப் பற்றிக்கொண்டு, 'இனி இவன் உங்கள் வீட்டுப் பிள்ளையில்லை; எங்கள் வீட்டுப் பிள்ளை' என்றார் தமக்கே உரிய அதிகாரத் தொனியில். 'ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?' என்றார் கிருஷ்ண மூர்த்தி. - 'சங்கீத ஞானம் இவனுக்கு இயற்கையாகவே வாய்ந்திருக்குடா கேள்வி ஞானத்தைக் கொண்டு ஒரு பிள்ளை இவ்வளவு அழகாகப் பாடி இதுவரை நான் கேட்ட தேயில்லை; அதனால்தான் சொன்னேன்' என்றார் அய்யங்கார். 'அப்படியா? ரொம்ப சந்தோஷம், வரட்டுமா என்று திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி, தூக்கக் கலக்கத்தில் சீக்கிர மாக வீடுபோய்ச் சேரவேண்டுமே என்று. 'வரட்டுமாவது! நாளையிலிருந்து கும்மட்டிச் சட்டி யையும் இடுக்கியையும் நீயே கட்டிக்கொண்டு அழு; அவற்றை இவன் தலையில் மட்டும் கட்டி வைக்காதே! பேசாமல் பொழுது விடிந்ததும் இவனை நீ என் வீட்டுக்கு அனுப்பிவிடு; நான் இவனுக்கு சங்கீதச் சிட்சை செய்து வைக்கிறேன்!” "சிட்சை என்றால் சும்மாவா? சன்மானம் ஏதாவது...' 'அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்; இவனை நீ என்னிடம் சிட்சை பெற அனுப்பி வைப்பதே எனக்குச் சன்மானம் அளித்த மாதிரி' அதற்கு மேல் என்ன சொல்லமுடியும் கிருஷ்ண மூர்த்தியால்? 'தங்கள் சித்தம்; என் பாக்கியம்' என்பது போல் தம்மனைவியின் முகத்தைப் பார்த்தார்; 'கூத்தாடிப் பிழைப்பதைவிடப் பாடிப் பிழைப்பது எவ்வளவோ மேல்தான்' என்பதுபோல் அவள் அவருடைய முகத்தைப் பார்த்தாள். அதற்குள், 'என்ன விழிக்கிறீர்கள். சம்மதந் தானே? "என்று கேட்டுவிட்டு, 'என்னடா, உனக்கும் சம்மதந்தானே?' என்று தியாகராஜனைக் கேட்டார் பொன்னுவய்யங்கார்.