பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 யிருக்கும். அந்தக் கூனை உண்டிவில்லால் குறி பார்த்து அடித்துவிட்டு அவன் சிரிப்பான். இந்த வேடிக்கை பிடிக்காத கூனி கைகேயிக்குத் தூபம்போட, அவள் தன் கணவரான தசரதருக்கு தூபம் போட, அதனால் பட்டத்துக் குரிய ராமன் காட்டுக்குப் போய் பதினாலு வருஷங்கள் படாதபாடு பட்டான். இதெல்லாம் எதனால் வந்த வினை? பெரியோரை எள்ளி நகையாடியதால் வந்த வினைதானே? வேண்டாம்டா கண்ணு இந்த விளையாட்டு? இன்றோடு இதை விட்டுவிடு என்ன, விட்டுவிடுகிறாயா?" 'விட்டுவிடுகிறேன், அம்மா!' 'இப்படிச் சொன்னதியாகராஜன் உடனே தன்னிடம் பாடம் கேட்க வந்தவர் பக்கம் திரும்பி, என்னை மன்னித்துவிடுங்கள், ஐயா! இனி உங்களை எள்ளி நகையாடியது போல் நான் யாரையும் எள்ளி நகையாட மாட்டேன். வேண்டுமானால் அந்தப்பாட்டை நான் உங்களுக்கு எழுதித் தருகிறேன்; அதைப்பாடும் விதத்தையும் எனக்கு தெரிந்தவரை சொல்லித்தருகிறேன். நீங்களே மனப்பாடம் பண்ணிக்கொண்டுவிடுகிறீர்களா?"என்றான். 'நன்றி.; அப்படியே செய்யுங்கள்' என்றார் அவர். சொன்னது சொன்னபடி செய்து அவரை அனுப்பி விட்டு 'அம்மா, இனி நான் சாட்சாத் ராமச்சந்திர மூர்த்தியாக இல்லாவிட்டாலும் உங்களுக்குப் பிடித்த பிள்ளையாக இருப்பேன். அம்மா' என்றான் தியாகராஜன். 'இனி என்னடா, இனி? எனக்கு நீ எப்பொழுதுமே பிடித்தபிள்ளைதான்' என்று அவனை ஆரத் தழுவிக் கொண்டாள் தாயார். மெளன குருவே, அரனே!... உடலை உணர்ச்சிகளுக்கு இரையாக விட்டு விட்டாலும் உள்ளத்தை மட்டும் உணர்ச்சிகளுக்கு இரையாக