பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 விடாமல் காத்துக்கொண்ட பெருமை இந்த நாட்டிலே சிலருக்கு உண்டு. 'யார் அந்தச் சிலர்?' என்று விழிக்காதீர்கள்; அவர்களே சித்தர்கள். அந்தச் சித்தர்கள், நாம் அறிந்த அந்தப் பதினொண்ம ரோடு நின்று விட்டார்களா? இல்லை; பத்தொன்பதாவது சித்தர், இருபதாவது சித்தர், இருபத்தோராவது சித்தர், என்று இன்றும் இந்த மண்ணிலே பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள்; வளர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்; வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ೩7ು. நாம்தான் அவர்களை அறிந்து கொள்வதில்லை; அறிந்து கொள்ள முயல்வதும் இல்லை. காரணம்?... சித்தர்கள் என்ற பெயரிலே பல எத்தர்கள் இன்று. இந்த நாட்டிலே நடமாடிக் கொண்டிருப்பதுதான் அந்த எத்தர்கள் வரிசையிலே சேராத சித்தர் ஒருவர் பாலக்கரையிலே இருந்தார். அவருடைய இயற்பெயர்?... தெரியவில்லை. மக்கள் இட்ட பெயர்?... குழுமியானந்த சுவாமிகள் குழுமியா? ஆமாம்; உய்ய கொண்டான் ஆறு இருக்கிறதே ஆறு. அது பாலக்கரை வழியாக வந்து பிரியும் இடத்துக்குக் குழுமி என்று பெயராம். அந்த இடத்துக்கு அமைதியை நாடிவந்து, அங்கேயே சமாதியும் கொண்டு விட்ட மேற்படி சுவாமிகளை அந்த இடத்தின் பெயரை வைத்தே குழுமி யானந்த சுவாமிகள்' என்று மக்கள் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள். சித்து பல செய்து மக்களின் சிந்தையை வெகுவாகக் கவர்ந்திருந்த அந்த சுவாமிகளை நம் தியாக