பக்கம்:எம். கே. டி. பாகவதர் கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 'அது எப்படி வெற்றியாகும் ' என்கிறீர்களா? இல்லாவிட்டால் ஆனானப்பட்ட தட்சணாமூர்த்தி பிள்ளை யவர்களே தியாகராஜனின் அரங்கேற்றத்துக்கு வந்து கஞ்சிரா வாசித்திருக்க முடியுமா? அந்தக் கதையையும்தான் கொஞ்சம் கேளுங்களேன்: கோவிந்தாச்சாரிக்கு மதுரை ஆச்சாரி என்று ஒரு நண்பர். தம் குலத்தொழிலைச் செய்து வந்து அவர், ஊரோடு இயங்கி வந்த பஜனை கோஷ்டிகள் சிலவற்றுக்கு அவ்வப்போது மிருதங்கம் வாசிப்பதைத் தம்முடைய பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். கடைசியாக அவரை அணுகி, பையனின் அரங்கேற்றத்துக்கு நீங்களாவது வந்து மிருதங்கம் வாசியுங்களேன்' என்றார் கோவிந்தாச்சாரி. தட்சணாமூர்த்திஆச்சாரியைக் கூட்பிட்டீர்கள் போல் இருக்கிறதே, அவர் என்ன சொன்னார்?' என்று மதுரை ஆச்சாரி கேட்டார். 'அந்த வெட்கக்கேட்டை ஏன் கேட்கிறீர்கள்? அவரும் அவனுக்கு வாசிக்க முடியாது என்று சொல்லி விட்டார்!" என்றார் அவர் சோர்வுடன். "அப்படியா? நான் அவரை வாசிக்க வைக்கிறேன்!” என்று மதுரை ஆச்சாரி அப்பொழுதே புதுக்கோட்டைக்குப் புறப்பட்டுப் போனார். சாட்சாத் தட்சணாமூர்த்தி பிள்ளை அவர்களையே நேரில் பார்த்து விஷயத்தைச் சொன்னார். "அப்படியா சொன்னான் அந்தத் தட்சிணாமூர்த்தி? நீங்கள் ஊருக்குப் போய் அவனை நான் மிருதங்கத்தோடு அரங்கேற்றத்துக்கு வரச்சொன்னதாகச் சொல்லுங்கள்; நானும் அன்றைக்கு அங்கே வந்து அவன் வாசிக்கிறானா, இல்லையா என்று பார்த்து விடுகிறேன்' என்றார் பிள்ளையவர்கள். 'நிறை குடம் தளும்பாது’ என்பதை நேருக்கு நேராகக் கண்டு மகிழ்ந்த மதுரை ஆச்சாரி, பிள்ளை